காதல்

காதல் 💘

நம் காதல் திடீரென்று பெய்த கோடை மழை
பொழிந்த நேரம் குறைவு
ஆனால் கருணை அதிகம்
உன் கண்கள் காதலுக்கு காரணமா
உன் சந்திர முகம் காதலுக்கு காரணமா
உன் கள் வடியும் இதழ்கள் காதலுக்கு காரணமா
உன் இளைத்த இடை காதலுக்கு காரணமா
உன் ஒய்யார நடை காதலுக்கு காரணமா
உன் அழகிய வடிவம் காதலுக்கு காரணமா
காரணங்கள் பார்த்து வருவதா காதல்
காலம்காலமாக கண்டதும் வருவதே காதல்
காதலுக்கு காரணம் என்ன
காதலித்தவர்களிடம் கேட்டேன்
புன்னகை தவிர அவர்களிடம் பதில் இல்லை.

- பாலு.

எழுதியவர் : பாலு (5-Oct-19, 5:19 pm)
சேர்த்தது : balu
Tanglish : kaadhal
பார்வை : 183

மேலே