தேவு சாவு

செல்லிடப்பேசி உரையாடல்
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
ஏன்டா மவனே பீக்காருலேயே நெரந்தரமா தங்கத் திட்டமா?
@@@@@@
அம்மா நான் மாவட்ட ஆட்சியாளரா இருக்கிறேன். நான் ஐஏஎஸ் தேர்வில தேர்ச்சி பெற்றதுக்கப்பறம் பயிற்சி முடிந்ததும் பீஹார் மாநில பட்டியலில் எனக்கு வேலை குடுத்தாங்க. எல்லா நிலையிலும் பின்தங்கி இருக்கிற அந்த மாநிலத்துக்கு முடிஞ்ச சேவையை செய்யணும்னுதான் நானும் அங்க பணியாற்றறதை விரும்பி ஏத்துட்டேன்.
@@@@@
உன்னாட்டம் நல்ல மனசு எத்தன அதிகாரிகளுக்கு வரும். நீ அங்கயே ஒரு இந்திக்காரப் பொண்ண எங்களுக்கு தெரியாம கல்யாணம் பண்ணீட்ட. அஞ்சு வருசம் ஆகுது. அவள இன்னும் நீ இங்க அழைச்சிட்டு வரல. உன்னோட மனைவிக்கு ரட்டைப் பசங்க பொறந்திருக்காங்கனு நாலு வருசத்துக்கு முன்னாடியே தகவல் சொன்ன. கொழந்தைங்க படத்தை இப்ப அனுப்பி வச்சிருக்க. உன்னாட்டமே எம் மருமவளும் பேரப் பசங்களும் அழகா இருக்கிறாங்க.சரி பசங்க பேருங்களச் சொல்லுடா மவனே. உங்க அப்பா ஏழை விவசாயி. உனக்கு தமிழரசுனு பேரு வச்சாரு. நீ கொழந்தைங்களுக்கு நல்ல தமிழ்ப் பேருங்கள வச்சயா?
@@@@@@
அம்மா தமிழ் நாட்டில இருக்கிற பெரிய படிப்புப் படிச்ச தமிழர்களே அவுங்க பிள்ளைகளுக்கு தமிழ்ப் பேருங்கள வைக்கிறது நாகரீகம் இல்லன்னு நெனைக்கறாங்க. பீஹார்ல இருக்கிற நான் என் குழந்தைங்களுக்குத் தமிழ்ப் பேருங்கள வச்சா நல்லா இருக்குமா?
@@@@@@
சரி அவுங்கப் பேருங்களச் சொல்லுடா மவனே தமிழரசு.
@@@@@@
ஒரு பையன் பேரு 'தேவ்' (Dev = divinity). இன்னோரு பையன் பேரு 'சாவ்' (Saav = honest man).
@@@@@@
என்னடா அநியாயம். 'தேவு', 'சாவு'ன்னா பேருங்கள வைக்கிறது. கல்யாணம் ஆயிரங்காலத்துப் பயிர்னு நம்மூர்ல சொல்லுவாங்க. பேரும் ஆயிரங்காலத்துப் பயிருடா.
@@@@|
அம்மா ரண்டு பேருங்களுக்கும் அருமையான அர்த்தம் இருக்குது. நமக்கு பிடிச்ச பேரா இருக்கணும். நல்ல அர்த்தமும் இருக்கணும். எத்தனையோ பேர் அர்த்தமில்லாத பேருங்கள அவுங்க பிள்ளைங்களுக்கு வச்சிருக்காங்க. தமிழ் நாட்டிலயும் புதுச்சேரியிலும் சிலர் அவுங்க பெண் குழந்தைக்கு 'பூவிஷா'ன்னு பேரு வச்சிருக்காங்க. அந்தப் பேரு எந்த மொழியிலயும் இல்ல. இந்திப் பேருன்னு நெனச்சிட்டு 'நிவிஷ்' 'புவிஷ்'ன்னெல்லாம் பேரு வச்சுக்கிறாங்க. நான் நல்ல அர்த்தமுள்ள பேருங்களத்தானே உங்க பேரப் பையன்களுக்கு வச்சிருக்கிறேன்.
@@@@@@@
சரி. அது உன்னோட விருப்பம். பொங்கலுக்கு குடும்பத்தோட வா. இங்க வந்தா பசங்களோட பேரு நம்ம ஊருக்காரங்களுக்குத் தெரிஞ்சா 'தேவு', 'சாவு'ன்னு சொல்லி கிண்டல் பண்ணுவாங்க. அவுங்களுக்கு தமிழ்ப் பேருங்கள வைக்கிறேன். அதையே நீ அவுங்க பேருங்கன்னு நம்ம சனங்களுக்குச் சொல்லிடு.
@@@@@@@
அம்மா என் மனைவி 'பாயல்'லுக்கும் உங்க பேரப் பையன்களுக்கும் இந்தியும் ஆங்கிலமும் தான் தெரியும். அவுங்க நம்ம மக்கள்கிட்டப் பேசப்போறதில்ல. கவலைப்படவேண்டாம். கண்டிப்பா நம்ம தமிழர் திருநாளுக்கு நாங்க வர்றோம்.
@@@@@@@
மவராசனா வாடா சாமி.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●●●●●●●●●●●●●●●●●●●●●●
சிரிக்க அல்ல. சிந்திக்க. தமிழுணர்வை வளர்க்க. வாழ்க தமிழ்!

எழுதியவர் : மலர் (7-Oct-19, 10:31 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 89

மேலே