பெற்றோர் வணக்க கீர்த்தனை (vaasuthevayani endra kalyaani raaga keerththanai mettu)

ராகம்: கல்யாணி தாளம்: ஆதி

(வாசுதேவயனி என்ற தியாகராஜர் இசைத்த
கீர்த்தனை மெட்டில் பாடவும்)

பல்லவி

பாரில் மிக உயர்ந்த ஒரே ஒன்பொருள்
அன்பு பெற்றோரே........எழில் மிகு (பாரில்)

அனு பல்லவி

பாசம் மிகுந்த அவர்கள் உள்ளத்திற்கு ...............
ஈடு இணை உலகில் வேறு எதுவும் இல்லை
(பாரில்)

சரணம்

வாஞ்சயுடனே நம்மைப் பேணி தினம் காப்பர்
வற்றா அன்பைத் தந்து மொழிவார்கள்
நாளும் வாழ நலம் பேணி என்றும்
நன்மை பல புரிந்து நெஞ்சம் மகிழ்வார்கள்
(பாரில்)

எழுதியவர் : ஸ்ரீ G .S vijayalakshmi (10-Sep-11, 7:21 pm)
பார்வை : 359

மேலே