அரசியல்வாதிகள்....

இவர்கள் ...........
பல லட்சம் பணத்தை சுருட்டும்
இந்தியாவின் ஏழைக் குடிமக்கள் !
சுருட்டியதை சுவிஸ் வங்கியல் போட்டு
சுத்தமானவர்கள் எனச் சொல்லும்
கரை படிந்த கை சுத்தமானவர்கள் !

சட்டத்தை ஓட்டையாக்கி உள்ளே
நுழைந்து வெளியேறும் ஆதிக்க
பெருச்சாளிகள் .................
ஏழையின் கோமணத்தை அவன்
ஏமாறும்போது திருடும்
குள்ளநரிக் கூட்டங்கள்.....................

சட்டத்தை தன் கைக்குள்
மடித்து வைக்க துட்டிக்கும்
மந்திரக்கோல் மன்னர்கள் .....
இந்தியாவை கூறுப்போட்டு
விற்கத் துடிக்கும் அழகு
வித்தைக் கற்றவர்கள்........

வாரிசுகளுக்கு சொத்தை சேர்த்து
வாலை சுரிடிக் கொண்டவர்கள் .....
வாரிசுகளே இல்லாத சிலதுகள்
சொந்தங்களுக்கு நாட்டை
பந்த மாக்கியவர்கள் ..............


எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (10-Sep-11, 10:25 pm)
சேர்த்தது : Thanga Arockiadossan
பார்வை : 243

சிறந்த கவிதைகள்

மேலே