இமயமலை போகணும்

அப்பா....
@@@
என்னடா மணியரசா?
@@@@
நான் இமயமலை போகணும்.
@@@@@@@
எதுக்கடா?
@@@@
தியானம் செய்யணும்.
@@@@@@
நெறைய செலவாகுமே. பேசாம பல சித்தர்கள் வாழ்ந்த நம்ம கொல்லிமலைக்குப் போய் பண்ணுடா மணி.
@@@@@@
அப்பா கொல்லிமலை மூலிகை மலை. சாதாரண மக்களுக்குத்தான் கொல்லிமலை சரிப்படும். தியானத்திற்கு ஏற்ற இடம் இமயமலை தான் சரியான இடம்.
@@@@@
உன்னால அங்க குளிர் தாங்க முடியாதே.
@@@@@@
மூத்த குடிமகன்கள்கூட இமயக் குளிரைத் தாங்கறபோது இருபது வயது இளைஞனான என்னால முடியாதா? செலவுக்கு ரண்டு லட்சம் குடங்க. நான் ரண்டு மாசம் தியானம் பண்ணீட்டு கைலாசம் போகணும்.
@@@@@@
சரி அங்க போயிட்டு வந்து என்னடா செய்யப் போற?
@@@@@.
ஆன்மீக அரசியலில் சேரப்போறேன். ஆன்மீக அனுபவத்தை வச்சு நாட்டில் உள்ள ரவுடிகளத் திருத்தணும்.
@@@@@
உன் நல்ல எண்ணத்தைப் பாராட்டறண்டா மகனே. வாழ்த்துக்கள்.

எழுதியவர் : மலர் (14-Oct-19, 8:47 am)
சேர்த்தது : மலர்1991 -
Tanglish : imayamalai pokanum
பார்வை : 101

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே