கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 20

அட்லஸ்: எமி, நீதான் சுஜி மாதிரியே பேசுவீயே....

எமி: நினைச்சேன், என்னைக்காவது ஒரு நாள் இப்படி ஒரு ஆள் மாராட்டம் பண்ணுவேன்னு, ஆனா இவ்வளவு சிக்கிரம்னு நினைக்கலே. சரி விடு நான் அவனை சமாளிச்சிக்கறேன். இப்போ நீ எங்க இருக்க? சுஜி பக்கத்துலையா?

அட்லஸ்: இல்ல. நான் இப்போ Fresh up ஆகா வீட்டுக்கு வந்தேன். இன்னும் கொஞ்ச நேரத்துல திரும்பவும் கிளம்பனும்.

எமி: சரி நீ முதல்ல கிளம்பு. மறக்காம அந்த வார்டு நம்பர் அனுப்பிரு.

அட்லஸ்: ஆ... சரி சரி. எமி,

எமி: என்னடா?

அட்லஸ்: Thank You எமி.

எமி: Thank you வா ... உனக்கு வந்து இருக்கு.

இருவரின் உரையாடலும் முடிந்து அட்லஸ் வந்த வேலையை பார்த்து விட்டு மீண்டும் மருத்துவமனைக்கு விரைந்தான்.அங்கே சுஜி இன்னமும் கண் விழிக்காமல் மயக்கத்திலேயே இருந்தாள்.

அவளின் கட்டிலின் பக்கம் இருந்த அந்த சோபாவில் நேராய் சென்று கால்கள் நீட்டி அமர்ந்தான் அட்லஸ். அங்கிருந்தவாறே கட்டிலில் படுத்திருந்த சுஜியை பார்த்தான். பார்த்துக் கொண்டே இருந்தான்.அவனால் தூரமாய் அமர முடியவில்லை.

ஒற்றை நாற்காலியை இழுத்து அவளின் கட்டிலின் பக்கம் போட்டு அங்கேயே அமர்ந்து கட்டிலில் முன்பை போலவே தலையை சாய்த்துக் கொண்டான். அப்படியே தூங்கியும் போனான்.

மயக்கத்திலிருந்து சுஜி கண் விழித்தாள் மெதுவாய். அட்லஸின் பக்கமாய் திரும்பி படுத்து கொண்டாள். குழந்தை போல் அவன் கைகளை கட்டி கொண்டு முகத்தை ஒரு ஓரமாய் வைத்து தூங்கி கொண்டிப்பதை பார்த்து புன்னகைத்த வண்ணம், அவனின் தலையை வருடினாள்.

அரை தூக்கத்தோடு கண்கள் விழிக்காமலேயே வருடிய சுஜியின் கரம் பற்றி அதில் அவனின் கன்னங்களை சாய்த்து வைத்துக் கொண்டு சொன்னான்,

அட்லஸ்: ஐ, ஹேட் யூ! போடி! சாகடிச்சிட்ட என்ன...

சுஜி: காதல்னா என்ன ஷெரிப்?

அட்லஸ் அவன் தலையை தூக்காமலேயே சுஜியின் பக்கம் திரும்பினான்.

அட்லஸ்: என்ன கேட்டே?

சுஜி: காதல்னா என்னென்னு கேட்டேன்?

அட்லஸ்: தோ, பார்த்துகிட்டு இருக்கேனே.

சுஜி சிரித்தாள். சத்தமாக.

சுஜி: சொல்லு, ஷெரிப் காதல்னா என்னே?

அட்லஸ்: தோ, பார்த்துகிட்டு இருக்கேனே. உயிரோட...

சுஜி: உனக்கு என்னே அவ்ளோ பிடிக்குமா ஷெரிப்?

அட்லஸ்: பிடிக்காமத்தான் உனக்கு ஒன்னுனா துடிச்சு போறேனா?

சுஜி அவளின் விரல்களால் அவனின் கன்னத்தை வருடினாள்.

அட்லஸ்: என் பிரச்சனை என்னே தெரியுமா? எனக்கானது; ஆனா, என் கை சேரா முடியாதது. இந்த பொண்ணு. இந்த பொண்ணு மேல, காதல். என் முதலும் கடைசியுமான காதல். இதாண்டா காதல். இப்படித்தான்டா காதலிப்பாங்கனு, புரிய வைச்சே காதல் !

சுஜி, அட்லஸை பேச விட்டு அமைதியாக அவனையே பார்த்தாள்.

அட்லஸ்: காதல்னா என்னனு இது வரை நான் பார்த்ததே இல்லே. Yes ! பார்த்தது என்னே, பண்ணாதே கிடையாதுன்னு சொல்லலாம். But, இப்போ பார்க்கறேன். கண்ணு முன்னுக்கு. நான்லாம் முன்னே ஒரு பொண்ண காதல் பண்ணேன்னு நினைக்கும் போதே, இல்ல இல்லவே இல்ல அதுலாம் காதலே கிடையாது.

சுஜி: அட்லஸ்...

அட்லஸ்: இல்லே பாப்பா. உண்மை. அதுலாம், சும்மா அந்த வயசுல வர சாதாரண பீலிங்ஸ் அவ்ளோதான். மேற்பட்டு வேறே ஒண்ணுமே கிடையாது. ஆனா, நான் இப்போ பார்க்கறேன் பாரு; இங்கே, இந்த காதல், சான்ஸ் இல்லே, இதுதான் காதல் !

அட்லஸ் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து சுஜியின் முகத்தினை அவனின் இரு கைகளால் பிடித்தான். இருவரின் கண்களிலும் கண்ணீர் ததும்பி நின்றது. இருவரின் ஆன்மாவும் மாறி மாறி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டது. தேங்கியிருந்த கண்ணீர் நொடிப்பொழுதில் கன்னங்களை நனைத்து நெஞ்சு குழியினுள் இறங்கியது. அட்லஸ், அப்படியே கண்களை மூடி சுஜியின் நெற்றியில் அவனின் நெற்றியை சாய்த்துக் கொண்டான்.

தொடரும் ....

எழுதியவர் : தீப்சந்தினி (14-Oct-19, 1:41 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 133

மேலே