கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 21

அட்லஸ் மீண்டும் தொடர்ந்தான்.

அட்லஸ்: எங்கையோ, எப்படியோ இருந்த என்னே இங்க கொண்டு வந்து நிக்க வெச்சிருக்கே, இதுதான் காதல் ! உன் குரல் ஒரு நாள் கேட்கலான கூட மண்டை மூளை எல்லாம் அப்படியே நின்னுப் போகும் பாரு, இதான் காதல் ! என்ன பண்றே, ஏது பண்றேன்னு உன்னையே நொடிக்கு நூறுதரம் நெனைக்க சொல்லுது பாரு இந்த மனசு, இதுதான் காதல் ! ஐயோ கடவுளே ! இவளை நிமலன் ஏதாச்சும் பண்ணிருவானோ, அப்படி ஏதாவது நடந்திட்டா அதுக்கு நான்தானே காரணம், அப்பறோம் என்னையே என்னால மன்னிக்க முடியாதேனு தினந்தினம் சாகர அளவுக்கு மனசு கிடந்து அடிசிக்குதே பாரு, இதுதான் காதல் !

சுஜி அவளின் கண்களை திறந்து அவனின் கன்னங்களை பற்றிக் கொண்டு சொன்னாள்.

சுஜி: ஷெரிப், என்னாலதான் நீ இப்படிலாம் மனசால ரொம்ப கஷ்டப்படற? இந்த வேதனைலாம் என்னாலதானே. வேதனை, துன்பம், torture தர இந்த சுஜி உனக்கு வேணாம் அட்லஸ் ! வேணாம்டா !

இல்லை என்று தலையாட்டிய அட்லஸ்,

அட்லஸ்: நான் இன்னிக்கி ஒத்துக்கறேண்டி. நான் தோத்துட்டேன். நான் சத்தியமா தோத்துட்டேன். உன்கிட்ட. நான் பண்றது தப்புதான். மிகப் பெரிய தப்புதான். என்னைக்குமே என் தப்ப நான் சரியாக்க முயற்சி பண்ண மாட்டேன். ஏன்னா எனக்கு உன்ன பிடிச்சிருக்கு. அவ்ளோ பிடிச்சிருக்கு சுஜி. இந்த தப்ப பண்ண எனக்கு பிடிச்சிருக்கு. அவ்ளோதான்.எனக்கு வேற எத பத்தியும் கவலை கிடையாது. எனக்கு உன்ன பிடிச்சிருக்கு, அதனால நான் பண்றது தப்பே கிடையாது.

சுஜி அட்லஸின் உதடுகளில் கை வைத்து அவனின் வாயை மூடினாள்.

சுஜி: அட்லஸ், உனக்கு என்மேல காதல்லா இல்லடா. வெறும் sympathy அவ்ளோதான். எனக்கு நான் தேடற அன்ப தரத்துக்கு ஏழு வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தன் இருந்தான். இப்போ இல்லே, அதே அன்பு இப்போ இருக்கறவன் கிட்ட எனக்கு கிடைக்கல. உன் கிட்ட கிடைக்குது. அது எனக்கான காதல். ஏன்னா முன்னே மாதிரியே என்ன முழுசா மாத்திருக்கே அப்போ எனக்கு அது காதல் தான்னே ? ஆனா, எம்மேல உனக்கு இருக்கறது காதலால வந்த அன்பு கிடையாது. வெறும் பரிதாபம். தனியா இருக்கற ஒரு பொண்ணு, பேச கூட துணையில்லாமா வேதனை படறாளேன்னு ஒரு வருத்தம். அதுதான் உன்னே என்கிட்ட அன்பாவும் நெருக்கமாவும் பழக வெச்சது. அவ்ளோதான். எனக்கு உம்மேல காதல். அது சத்தியம். பாரேன், நான் சத்தியம்லா பண்ணவே மாட்டேன். ஏன்னா, அதை நான் நம்பவே மாட்டேன். ஆனா, இப்போ பார்த்தியா நானே சத்தியம்லா பண்றேன். நம்பறேன் உனக்கு எம்மேல வெறும் பரிதாபம் தான்னு நம்பறேன்.

நல்ல சிரியல் போல இழுத்துக் கொண்டு இருந்த அவர்களின் காதல் காட்சிகள் அங்கு திடிரென்று வந்த எமியால் தடைப்பட்டு போனது.

எமி: எஸ்ஸுஸு மீ காதலர்களே, நான் உள்ளே வரலாமான்னு கேட்கவே மாட்டேன். ஏன்னா நான் வந்துட்டேன். அதனால,மிஸ்ட்டர் அட்லஸ் நீங்க உங்களுக்கு வேற வேலை ஏதாவது இருந்த போய் பாருங்களேன். நான், என் சுஜி கிட்டே கொஞ்சம் பேசணும். தனியா...

தனியா என்று வார்த்தையை எமி இழுக்கும் போதே அட்லசுக்கு புரிந்தது அவனை அவள் சீக்கிரம் போய் தொலையேண்டா என்று சொல்லாமல் சொல்கிறாள் என்று.

அட்லஸ், எமியிடம்.

அட்லஸ்: சரி, சரி கிளம்பறேன். சுஜியை பார்த்துக்கோ.

எமி: அதுலாம் எங்களுக்கு தெரியும். நீங்க கிளம்பலாம்.

அட்லஸ், சுஜியிடம்.

அட்லஸ்: இது இன்னும் முடியல. நாம பேசணும். பேசியே ஆகணும். நிறைய இருக்கு தீரா. எமி கிளம்பிட்டா கால் பண்ணு.

சொல்லி அவளின் நெத்தியில் முத்தம் ஒன்றை வைத்தான் அட்லஸ். அதை பார்த்து சிரித்த எமி,

எமி: வாவ்... தாங்கலடா சாமி... கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்.

மூவரும் இம்முறை சத்தம் போட்டே சிரித்து விட்டனர். அட்லஸ் அவ்வறையை விட்டு வெளியேறும் முன் சுஜியை பார்த்து சத்தமின்றி வாயை மட்டும் அசைத்தான்,

அட்லஸ்: ஐ ஹேட் யூ ! ஐ லவ் யூ ! மலேசியா மந்திரம் பண்ணிட்டா என்னே !

தொடரும்....

எழுதியவர் : தீப்சந்தினி (14-Oct-19, 1:45 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 201

மேலே