கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 22
அட்லஸின் கையிலிருந்த கைத்தொலைபேசி அலறியது. அவனின் அந்த பழைய காதல் நினைவுகளும் கொஞ்சம் இடைவெளி எடுத்துக் கொண்டன. அலறிய கைத்தொலைபேசியை கை பற்றினான் அட்லஸ். அழைத்தது எமி தான்.
அட்லஸ்: சொல்லு எமி.
எமி: காதல் மன்னா, என்ன பண்றீங்க?
அட்லஸ்: ஹ்ம்ம்.. என் காதல் கண்மணியே நினைச்சுகிட்டு இருக்கேன்.
எமி: ரொம்பதான், அவ தான் உன்ன கழட்டி விட்டுட்டு ஊர் சுத்த போய்டாளே.
அட்லஸ்: ஜாலியா இருக்கட்டும் விடேன்...
எமி: அது சரி, காதலி பத்தி பேசின போதுமே. உர்ருனு ஆயிடு. டேய் எருமே இன்னிக்கி நைட் நீ
free யா ?
அட்லஸ்: ஏன்?
எமி: படம் பாக்க போலாம்.. ஜோக்கர்
அட்லஸ்: நானும் சுஜியும்...
எமி: டேய், டேய்.. டேய்... இதெல்லாம் ஓவர். நீயும் அவளும் ? ஒண்ணா படம் பார்க்கா ? சும்மா வாயிலையே வடை சுடாதடா. வாயே குத்தி மூஞ்சியே ஒடச்சிருவேன்.
அட்லஸ் எமி சொன்னதை கேட்டு சிரித்தான்.
அட்லஸ்: சரி, சரி போலாம். ரொம்ப ஓட்டாதா.
அவளிடம் பேசி முடித்து ரிசீவரை வைத்தவன் அவனின் வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.
எமியும் அட்லஸின் தொடர்பை துண்டித்து, அவளின் முகப்புத்தகத்தை திறந்தாள். இந்த முகப்புத்தகத்தில் பல சிறப்புகள் இருந்தாலும் மிகவும் அருமையான ஒன்று என்பது போன வருடம் இதே திகதியில் நாம் என்ன upload செய்துள்ளோம் என்பதனை நமக்கு மீண்டும் ஞாபகப்படுத்துவதே ஆகும்.
அதே போல், போன வருடம் இதே நாளில் வயிற்றில் கத்தி குத்து வாங்கி bed-ல் கிடந்த தன் தோழி சுஜியை காண மருத்துவமனைக்கு விரைந்த நிகழ்வு தான் அவளின் news feed முதன்மையில் நின்றது.
அந்த புகைப்படத்தை பார்த்த எமிக்கு ஒரே சிரிப்பு. சிரிப்பின் எதிரொலியும் பலமாகவே கேட்டது. அவ்வளவு பெரிய வீட்டில் தனியாக தான் இருக்கிறாள் எமி. அவளின் குடும்பம் முழுவதும் பினாங்கில் உள்ளனர்.
மாதம் ஒரு முறை அவளின் அம்மா அவளை பார்க்க வந்து தங்கி போவார். எமிக்கு அண்ணன் இருவர். தங்கை ஒருத்தி. அப்பா சிறு வயதிலேயே இவர்களை விட்டு பிரிந்து தனித்து சென்று விட்டார். இருந்தும், அவரின் கடமையிலிருந்து தவறாது பிள்ளைகளுக்கு செய்ய வேண்டியது, தர வேண்டியது என அனைத்தையும் பார பட்சம் பார்க்காமல் இன்னமும் செய்து வருகிறார்.
அவர் இரண்டாவது திருமணம் எல்லாம் ஏதும் செய்து கொள்ளவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை. எமியின் அம்மாவுடனும் சேர்ந்தும் வாழவில்லை. அது சரி, நமக்கு எதற்கு இப்போது எமியின் குடும்பக் கதை. நாம் சுஜியின் கதைக்கு வருவோம்.
அட்லசுடன் பேசும் போதே கிச்சனில் கேரட் துண்டுகளை நறுக்கிக் கொண்டுதான் இருந்தாள் எமி. இப்போது நறுக்கிய துண்டுகளை ஒவ்வொன்றாய் வாயில் போட்டு நறுக் நறுக் என கடித்துக் கொண்டே, அந்த சாப்பாடு மேஜையின் நாற்காலியை இழுத்து அதில் அமர்ந்து கொண்டு போனை பார்த்து சொந்தமாக பேசி சிரித்தாள் எமி.
எமி: கள்ளி ! கள்ளி ! கொஞ்சநஞ்ச நடிப்பாடி நடிச்சே நீ ! பக்கி, பக்கி, கத்தி குத்து வாங்கியும் அடங்கறியா நீ !
சிரித்துக் கொண்டே இருந்த எமிக்கு அன்று மருத்துவமனையில் இருந்த சுஜியிடம் அவள் என்ன பேசினாள் என்பது ஞாபகத்திற்கு வந்தது.
தொடரும்...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
