கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 23

எமி சற்று முன் அட்லஸ் அமர்ந்திருந்த அதே நாற்காலியை அவள் வசம் இழுத்து வைத்து அதன் மீது அமர்ந்தாள். ஏற்கனவே, வெட்டி எடுத்து வந்த ஆரஞ்சு துண்டுகளை சுஜியிடம் நீட்டி வேண்டுமா என்றுக் கேட்டாள். சுஜி வேண்டாம் என்று சொல்லவும்,

எமி: வேணான்னா போ..

குழந்தை தனமாய் பேசி ஆரஞ்சு துண்டுகளை வாயில் அதக்கி கொண்டு இருந்தவளை பார்த்து சுஜி சொன்னாள்,

சுஜி: தந்கயூ எமி. அட்லஸ் சொன்னான். நீதான் நிமலன் கிட்ட என்ன மாதிரியே பேசனாதா. சோரி, கோச்சிக்காதா.

எமி: அது கிடக்கட்டும். உனக்கு ஷெரிப்வே அவ்ளோ பிடிக்குமா சுஜி ?

சுஜி: ஏன் திடிர்னு கேட்கற எமி ?

எமி: அப்படிலாம் ஒன்னும் இல்லே, சும்மா தெரிஞ்சிக்கலாம்னுதான். கத்தி குத்து சீன்லா நடந்துருக்கு, அதான் கதையோடு தொடக்கம் தெரிஞ்சா முடிவே கொஞ்சம் பிரிடிக் பண்லாம்லே. அதான்.

ஐந்து நிமிட இடைவேளைக்கு பிறகு சுஜி பேச ஆரம்பித்தாள்.

சுஜி: It’s been 7 years. கனவு மாதிரி இருக்கு. எல்லாம். பயமா இருக்கு எமி. கனவு கலைஞ்சிடும்னு.

எமி: உன் கனவு கலைஞ்சிடும்னு பயப்படற நீ, மத்தவங்க கனவே கலைக்கறது நியாயமா?

சுஜி: சுயநலமா இருக்கணும்னு நான் நினைக்கல எமி. ஆனா, முடியல.

எமி: சுயநலத்துல ஒரு பொதுநலம் இருந்தா பிரச்சனையே இல்லே. ஆனா, மொத்தமும் சுயநலமாவே இருக்கறதுதான் மிக பெரிய பிரச்சனை.

சுஜி: எதையும் சமாளிக்கற தைரியம் கயல் தீராவுக்கு இருக்கு.

எமி: சுஜிக்கு இல்லையே ! காதல் மயக்கத்துல இருக்காளே அவ.

சுஜி: ஷெரிப் விட்டு விலக சொல்லறீயா எமி ?

எமி: விலகனும்னு சொல்லல. ஆனா, விலகனா நல்ல இருக்கும்னு சொல்றேன்.

சுஜி எமியை பார்த்தாள். முறைக்கவில்லை. சும்மாதான் பார்த்தாள்.

எமி: நிமலன் பத்தி உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்ல. அவனை பகைச்சிக்கிட்டு ஒன்னும் பண்ண முடியாது. அது உனக்கே தெரியும். இதை தப்புனு நான் சொல்லல. தவறுன்னு சொல்றேன். திருத்திக்கலாம். பெரிய டீல்லா ஒன்னும் இல்ல.

சுஜி: சில தவறுகள் திருத்தப்படாமலேயே இருக்கலாம். நமக்கு சந்தோசம் தரதா இருந்தா.

எமி: சுஜி, உனக்கான சந்தோசம் நிலைக்காது. செத்துருவான் ஷெரிப். நிமலன் அவனை விட மாட்டான். இது அவன் கோட்டை. தடயம் இல்லாமா அழிச்சிடுவான்.

சுஜி: செய்ய மாட்டான். எனக்கு தெரியும் நிமலனே பத்தி.

எமி: என்ன எழவு தெரியும் உனக்கு ? ஒரு மண்ணு தெரியாது. நீ நிமலனே வெளிய மட்டும் தான் பார்க்கற. பார்த்து இருக்க.

சுஜி: நீ சொல்றதெல்லாம் பண்றதுக்கு நிமலன் ஒன்னும் ஆட்வித் கார்மீகன் கிடையாது. நிமலன் சர்வேஷ் குமார்.

சுஜி சொன்னதைக் கேட்டு கைதட்டி சிரித்தாள் எமி.

எமி: அதை நீ நம்பலாம். ஏன், ஊரே நம்பலாம். நான் நம்ப மாட்டேன்.

சுஜி கண்களை அகல விரித்து அதிர்ச்சியோடு எமியை பார்த்தாள்.

தொடரும்....

எழுதியவர் : தீப்சந்தினி (15-Oct-19, 4:19 pm)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 206

மேலே