என் காதலியை வருணிக்க
என் காதலியை வருணிக்க
வார்த்தைகளே அகராதியில்
எங்கும் தேடினேன் கிடைக்கவேயில்லை
அவளின் வதனமோ பௌர்ணமி
நிலவைபோன்று வட்டமானது அவளது
விழிகளோ கெண்டை மீனை எனக்கு
நினைவுபடுத்தும் அவளது வாளிப்பான
மேனியோ சந்தன மரத்தை செதுக்கி
செய்தார்போல அப்படியொரு மின்னும் தேகம்
புருவங்களோ அருஜுனன் வில்லை ஒத்தது
கரங்களில் வளையலோசை குலுங்க
கால்களில் கொலுசொலி கொஞ்ச அவளின்
நடையழகில் அன்னம் கூட போட்டி போட்டு
தோற்று போனதில் வியப்பில்லை
சிறுத்தஇடை வரை நடனம் ஆடிச்செல்லும்
கருங்கூந்தல் கண்டு நாகமே படமெடுத்து
சீற்றம் கொள்ளாது முடங்கியதென்னவோ
அழகில் மட்டுமில்லாது ஆய கலைகளிலும்
தேர்ச்சி கொண்டவள் என்ற மமதையை
தலைக்கு ஏற்றாதவள் அவளின் அழகை செதுக்க
தேவர்களின் சிற்பி விசுவகர்மாவை அழைத்தேன்
என்னால் பூர்ணமாக செதுக்க இயலாது என்று போயி விட்டான்
வைரமுத்து கண்ணதாசனை கவி பாட அழைத்தால்
எங்களால் இயற்ற இயலாது என பின்வாங்கினர்
காளிதாசனை கம்பன் பெற்ற அம்பிகாபதியை
அழைத்தேன் அவர்களோ இப்படி ஒரு பேரழகை வருணிக்க
வார்த்தைகள் எந்த வெண்பாவிலும் அமைத்து பாட இயலாது என
அவர்களும் சரணடைய எங்கு செல்வேன் எப்படி
என் காதலியை வருணிக்க !
உங்களுக்கு ஒரு உபாயம் தெரிந்தால் சொல்லுங்களேன்!