sooriyasuresh - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  sooriyasuresh
இடம்:  tirunelveli
பிறந்த தேதி :  08-Aug-1981
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Sep-2013
பார்த்தவர்கள்:  136
புள்ளி:  13

என்னைப் பற்றி...

நான் நிறைய புத்தகங்கள் படிப்பேன். கல்லூரி காலத்திலேயே கவிதை கதை படிக்க பிடிக்கும்.

என் படைப்புகள்
sooriyasuresh செய்திகள்
sooriyasuresh - எண்ணம் (public)
29-Jan-2020 8:46 am

கண்ணனை  இரண்டு நிமிடங்கள்
          காணவில்லை  என்றாலே
கலங்கி விடுவாள் ராதா கண்ணனை
      தந்தையிடமிருந்து ஒளித்துவைக்க இடம்  தேடியவாறு  அங்குமிங்குமாய்
         கருவிழிகள் அலைபாய  கண்ணன்  ராதாவைத் தேடிவர  அங்கு பதட்டமாய்
         ஏதோ அவள் தேடுவதை காண்கிறான்
 ராதா ஏனிந்த  பதட்டம்
         உனக்கு உன் கண்ணன்  இருக்கையில்? என்ன தேடுகிறாய் ராதா கூறு உன் கண்ணன் உதவுகிறேன்
        என  கரம் பற்ற "கண்ணா! என் தந்தை 
வரனுடன்  வருகிறார் உன்னை கண்டால் 
         சினமடைவாரே! எங்கு உன்னை
மறைக்கவென்று  தக்க இடம் தேடுகிறேன்"
      எனக் கூற கண்ணன் பதிலுரைக்காது
புன்னகைக்க  ராதா இயலாமையுடன்
       "என்னால் உன்னை இழக்கமுடியாது  கண்ணா நீயின்றி நானில்லை கண்ணா"
          அனைத்துமறிந்தவன் நீ ! உனக்குத் தெரியாதா நீ தக்கவிடமறிந்து
        மறைந்துகொள் எனக் கூற 
 கண்ணன் தனக்கேயுரிய குறும்புடன்
         ராதாவிடம்  உன் இதயத்தில் ஏற்கனவே குடியேறிவிட்ட
          என்னை எங்கு ஒளிந்து கொள்ளச்
  சொல்கிறாய் ராதா?  உன் மனச்சிறையில்
            காதல் கைதியாய்  இருக்கிற என்னை  வெளியேற்றிவிடாதே!
         இதைவிட தக்க
  பாதுகாப்பிடம் வெளியில் இல்லை
         என்னவள்  ராதா ! இருந்தாலும்
  என் ராதாவை விட்டு வெளியேறும்
           உத்தேசமில்லை எனக் குறும்பு கலந்த
காதலுடன் சொல்ல ராதா கண்ணனை
           கரம் பற்றி காதலுடன் தோள்சாய
  காதல் கீதம் மெல்லிசையாய்
            கண்ணனின் புல்லாங்குழல் நாதத்துடன்   அரங்கேறியது

மேலும்

sooriyasuresh - எண்ணம் (public)
04-Dec-2019 7:46 am

நேற்றுவரை எனக்கு 
       என்னை தெரியவில்லை
தேடினேன் கிடைக்கவில்லை 
        நேசம் உன்னிடத்தில் 
 பெற்றதும்  புதிதாகப் 
          பிறந்தேன்
 நான் காணும் உலகம் நீ 
        வந்தபின் அழகானது
வாழ விரும்பாத எனக்கு 
     தனித்தீவில் உன்னுடன்
இயற்கை அழகை 
     ஆனந்தமாய் ரசித்து வாழ
 ஆசை வந்தது  உன்னில்
        இனிமையாய் ஒன்றாக 
 அணைப்பில் என் உயிர் 
         அணைந்திட ஏக்கம்
  அடைந்தது நீ  வருவாயா 
       என் கண்ணே

மேலும்

sooriyasuresh - எண்ணம் (public)
16-Oct-2019 2:05 pm

சிற்பியின் உளிக்கு உதவாத கல் 

        எவ்வாறு சிலையாக முடியாதோ 
சிந்தனைக்கு உதவாத எண்ணங்கள் 
          எவ்வாறு சிறந்த படைப்பாகாதோ
ஆசிரியருக்கு பணியாத மாணவனும் 
           எவ்வாறு சிறந்த குடிமகனாய்
 வருங்கால சமுதாயத்தில் திகழ்வான்?

          
      

மேலும்

மிக சரியான வரிகள் . உண்மை 17-Oct-2019 2:38 pm
sooriyasuresh - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2019 10:25 am

மலரை விட மென்மையானவள்
மனசையெல்லாம் அள்ளுபவள்
மந்தஹாசமான அவள் சிரிப்பை
பட்டியல் இட்டாலும் ஈடாகாது
அவள் நடை கண்டு அன்னமும் போட்டியிட
தயங்கி பின்வாங்கிய ஆச்சர்யம்தான் என்ன!
உன் காதலியின் கூந்தலோ
கருநாகத்தை ஒத்தது
அவள் நடந்து செல்கையில்
முன்னழகோ மலர காத்திருக்கும்
தாமரை மொட்டு போன்றது
முத்துப்போல வரிசைகட்டி
சிரித்தால் அழகாக தெரியும் பற்கள்
சாயம் பூசியத்தை போல காட்சியளிக்கும்
கோவை பழமாய் இதழ்கள்
சிறுத்த இடை அதில் கட்டியிருக்கும்
கண்டாங்கி சேலை தேக்கு மரத்தை
செதுக்கியதைபோல வாளிப்பான உடல்வாகு
கைகளில் வளையல்கள் குலுங்க காலில்
கொலுசுகள் ஆட என் காதலியை வர்ணிக்க
ஒரு வைரமுத்து ஒரு அனிர

மேலும்

sooriyasuresh - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jun-2019 8:06 am

தேன்கூட்டைக் கலைக்க நினைக்கிறது
தேளிலும் கொடூரமான நச்சுக் கரங்கள் !

மதவெறி அறியாத மானமிகு மனங்களை
நசுக்கத் துடிக்கிறது வஞ்சக நெஞ்சங்கள் !

இனவெறி இல்லாத இரக்க உள்ளங்களை
இரும்பான இதயங்கள் சீண்டிப் பார்க்குது !

சமதர்மம் காக்கும் சமதத்துவ மண்ணில்
சந்தர்ப்பம் தேடுது சமயத்தை நுழைத்திட !

சாதிமதம் மொழியை மறந்து வாழ்ந்திடும்
சகோதரத்துவ உறவை பிரிக்க நினைக்குது !

​அன்பும் பண்பும் நிலைத்தத் தமிழகத்தை
​அறநெறி பிறழ்ந்து ​அடக்கியாளத் துடிக்குது !

​தித்திக்கும் தமிழை நிலையாக அழித்திட
திணிப்பைத் துவக்குது குறுக்கு வழியில் !

ஒற்றுமைக் காத்து ஓங்குபுகழ் தாய்மொழியை
எவரும் வீழ்த்திடா வகையில் காத்

மேலும்

மிக்க நன்றி ஐயா 25-Jul-2019 7:06 am
உண்மைதான் ஐயா .மிகவும் சரி 25-Jul-2019 7:06 am
சமகால நிகழ்வுகளையும், சமூக அவலங்களையும் சிந்தனைக்கு உறைக்க உரைக்க பட்ட அருமையான கவிதை வாழ்த்துக்கள் அய்யா 24-Jul-2019 10:34 pm
கற்ற தமிழர்களில் பெரும்பாலோர்க்கு தாய்மொழிப் பற்றும் இல்லை இன உணர்வும் இல்லை. இனியேனும் அவர்கள் திருந்தி தமிழைக் காத்திட முன்வரவேண்டும். 22-Jun-2019 6:46 am
sooriyasuresh - sooriyasuresh அளித்த மனுவை (public) பகிர்ந்துள்ளார்
02-May-2014 12:53 pm

சிறுவர்கள் அடிக்கடி ஆழ் துளை கிணறுகளில் விழுந்து பலியவதால் அதற்கு அனுமதி கொடுக்கும்போதே சில நிபந்தனைகளை விதித்து மீறுபவர்களுக்கு தண்டனையை ஒத்திபோடாமல் கண்ணெதிரில் கடுமையான தண்டனையை வழங்கினால் மற்றவருக்கும் பொறுப்பு வரும். உயிர் பயத்திலாவது கடைபிடிக்க தோன்றும். நஷ்ட ஈடு கொடுத்தல் போதும் என்ற நிலை நீடித்தால் பலியாவதும் நீடிக்கும். தண்டனை அதற்கு உரிய மந்திரிகளுக்கும் வழங்கினால் மட்டுமே ஊழல் ஒழிக்க வகை செய்ய ஏற்பாடு பண்ண வேண்டும் அதை விடுத்து அரசாங்கமே நஷ்ட ஈடு கொடுத்து பொறுப்பிலிருந்து கழண்டு கொண்டால் இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்கள் எங்கு போவார்கள்.

மேலும்

நிச்சயமாக இன்றைக்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடு. 12-May-2014 9:32 am
ஆ ம் நானும் இக்கருத்தை வழிமொழிகிறேன் .அனுமதி வழங்கும்போதே எத்தகைய ஆழ்துளை கிணறுகளை மூடவேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்குரிய அனைத்த ஏற்பாடுகளை செய்ய உறுதி பத்திரத்தையும் பெறவேண்டும் . 03-May-2014 6:00 pm
கட்டாயம் செய்ய வேண்டியது 03-May-2014 6:53 am
ஆழ்துளை குழாய் கிஅணறு விஷயத்தில் அதை அமைப்பவரும், நில உரிமையாளருமே பொறுப்பேற்க வேண்டும். சுற்றியுள்ள மக்களுக்கும் பொறுப்பு உள்ளது. 03-May-2014 12:14 am
sooriyasuresh - vaishu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2015 12:52 am

மீண்டும் வாராயோ.. மீட்டு செல்ல..

அலை அலையாய் வந்து எனை தழுவினாய்..

மெல்ல மெல்ல உன்னுள் இழுத்துக்கொண்டாய்..

உந்தன் அரவணைப்பில் மயங்கியே கிடந்தேன்..

சற்றும் எதிர்பாராமல் ஏன் என்னை கரையில் சேர்த்தாய்?

உன் அன்பின் ஈரமில்லா வறண்ட மணல் சுடுகிறதே...

-வைஷ்ணவ தேவி

மேலும்

அருமை...... 26-Dec-2015 5:40 pm
நன்றி பிரியா... 31-Mar-2015 10:11 pm
காதலின் ஏக்கம் வரிகளில் அழகாய்......அழகு வைஷு.......! 31-Mar-2015 1:50 pm
ம்ம்ம்.... 18-Mar-2015 1:21 am
sooriyasuresh - அ ஜா ஆரன் காஸ்ட்ரோ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jul-2014 7:13 pm

உன் பூவிழிகள் என்னை ஈர்க்க
வண்டாய் நானும் .......
காதல் தேன் அரும்ப நினைத்தே
உன் அருகில் வந்தேன் ...உன் விழிகள்
பூச்சி உண்ணும் பூவென தெரியாமல் ......

மேலும்

அழகான வரிகள்.. தோழரே.. 03-Mar-2015 3:28 pm
தெரியாமல் 04-Jul-2014 11:07 pm
அப்படியா!! உன் விழிகள் பூச்சி உண்ணும் பூவென தெரியாமல் ..... அழகு நண்பரே!! 04-Jul-2014 11:04 pm
உன் விழிகள் பூச்சி உண்ணும் பூவென தெரியாமல் ..... மிகவும் ரசித்த வரிகள் நட்பே . 04-Jul-2014 5:17 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

வேஅழகேசன்

வேஅழகேசன்

ஈரோடு
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
Naveenasekar

Naveenasekar

Coimbatore
கவிஜி

கவிஜி

COIMBATORE

இவர் பின்தொடர்பவர்கள் (6)

பழனி குமார்

பழனி குமார்

சென்னை
வேஅழகேசன்

வேஅழகேசன்

ஈரோடு
கவிஜி

கவிஜி

COIMBATORE

இவரை பின்தொடர்பவர்கள் (6)

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
வேஅழகேசன்

வேஅழகேசன்

ஈரோடு
மேலே