என் காதலியை வருணிக்க

மலரை விட மென்மையானவள்
மனசையெல்லாம் அள்ளுபவள்
மந்தஹாசமான அவள் சிரிப்பை
பட்டியல் இட்டாலும் ஈடாகாது
அவள் நடை கண்டு அன்னமும் போட்டியிட
தயங்கி பின்வாங்கிய ஆச்சர்யம்தான் என்ன! en காதலியின் கூந்தலோ
கருநாகத்தை ஒத்தது
அவள் நடந்து செல்கையில்
முன்னழகோ மலர காத்திருக்கும்
தாமரை மொட்டு போன்றது
முத்துப்போல வரிசைகட்டி
சிரித்தால் அழகாக தெரியும் பற்கள்
சாயம் பூசியத்தை போல காட்சியளிக்கும்
கோவை பழமாய் இதழ்கள்
சிறுத்த இடை அதில் கட்டியிருக்கும்
கண்டாங்கி சேலை தேக்கு மரத்தை
செதுக்கியதைபோல வாளிப்பான உடல்வாகு
கைகளில் வளையல்கள் குலுங்க காலில்
கொலுசுகள் ஆட என் காதலியை வர்ணிக்க
ஒரு வைரமுத்து ஒரு அனிருத் போதாது கம்பன்
பெற்ற அம்பிகாபதியே திணறுவான்!
அவளின் அழகை கண்டு பிரமித்து சந்தம் அமைக்க
மெய்மறப்பான்! தேவர்களும் காத்திருப்பர் உனக்கு போட்டியாக
காளிதாஸ் வருவான் கவிதை என்னால் இயற்ற இயலாது
இந்த பேரழுகுக்கு எனத் தோற்று போவான் - என் காதலியின்
பிரபஞ்சத்துக்கு ஒப்பானவள் நிலவின் குளிச்சியானவள்
கற்பில் சூரியனை போல வெம்மையானவள்
அவளுக்கு அவளே நிகரானவள்

எழுதியவர் : சூர்யா சுரேஷ் (15-Oct-19, 10:25 am)
சேர்த்தது : sooriyasuresh
பார்வை : 88

மேலே