சித்தமெல்லாம் சிவமயமே

நம சிவாய என்னும்
ஐந்தெழுத்து மந்திரத்தில்....!!!
முக்தி என்னும்
மூன்றெழுத்து வரத்தின்
இரகசியம் உணர்ந்திடு
என் மனமே....!!!

பிட்டுக்கு மண்
சுமந்த பித்தனை
பிதற்றாமல் நீயும் பணிந்திட.....!!!
பிழையில்லா ஞானத்தினை
பெற்றிடுவாய் என் மனமே.....!!!

ஊன் படைத்தோனுக்கு
அருள் தந்த உமையாள் நாதனை,
உளமார வணங்கிட........!!!
கள்ளமில்லா பக்தியில்
மூழ்கிடுவாய்
என் மனமே.....!!!

நம சிவாய என்னும்
மந்திர மாலையை
மெய்யுருக ஓதிட
தீவினை
உன்னை தீண்டிடுமோ..??
என் மனமே...!!!

ஆதியும் அந்தமுமில்லா
அதிசயனை அணு தினமும்
நினைத்து .... !!!
தூய பக்தியில்
மூழ்கிட....
சித்தமெல்லாம் சிவமயமாகி
முக்தி என்னும் வரம்
பெற்று
சிவனடி சேர்ந்திடுவாய் என் மனமே.......!!!

~ * லீலா லோகிசௌமி * ~

எழுதியவர் : லீலா லோகிசௌமி (15-Oct-19, 4:12 pm)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
பார்வை : 352

மேலே