எனக்குள்ளே நீ

உயிர் மூச்சோடு
மூச்சாகக் கலந்து/
நாடித் துடிப்போடு
துடிப்பாக இணைந்து/

இதய மடிப்போடு
மடிப்பாக அமர்ந்து /
உணர்ச்சியோடு உணர்ச்சியாய் உணர்வலையில் வளர்ந்து/

ஓடும் இரத்தத்துடன்
உள்ளத்தில் இறங்கி/
நெஞ்சுக் குழியிலே
திருடனைப் போல் பதுங்கி/

வஞ்சியென் விழியில்
கனவாகப் பொங்கி/
கஞ்சமில்லாமல்
ஆசையதைப் பெருக்கி/

அடங்காத மோகத்தை
ஆழக்கிடங்காக்கி/
ஆட்சி புரிகின்றாய்
எனக்குள்ளே நீயடா/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (15-Oct-19, 2:27 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 102

மேலே