ஒருமுகக் காதல்

மேகத்திற்கு நிலவின் மீது காதல்
நிலவிற்கோ வானத்தின் மீது காதல்
மேகம் நிலவை துரத்த , நிலவோ
வானம் பார்த்து போனது
அவள் மீது நான் காதல் கொண்டேன்
அவள் மனமோ என்மீதில்லை
அது அவள் பார்வையில் தெரிந்தது
அவள் அங்கங்கள் பேசும் மொழியில்...
இது என்ன ஒருமுகக் காதல் என்று
நான் விலகிப்போகின்றேன்
நிலவை விட்டு போகும் அந்த
வெண்மேகம்போல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (15-Oct-19, 1:20 pm)
பார்வை : 260

மேலே