அவள் இட்ட கோலம்
அவள் தரையில் போட்டது
கோலம், அதன் கோலம்
'இதய கமலம்'.......
வரைந்த கோலத்திற்கு
வண்ணமிட்டு , இழைத்த
கோலத்தை ஒருமுறைப் பார்த்து
மகிழ்ந்தபின்னே, தலை நிமிர்ந்து
என்னைப் பார்த்தாள்,
ஒரு அர்த்தபுஷ்டியான புன்சிரிப்பு
அவள் இதழ்களை கோலம்போட
புரிந்துகொண்டேன் நான்
அவள்போட்ட' இதய கமலம்'
அவள் இதயத்தில் அமர்ந்த
காதலன் நான் என்றதே