விந்தை உலகம்
வேறுபட்ட உலகின்
வெவ்வேறு கண்ணாடிமுன்
வெவ்வேறு மனிதர்கள்
புகழ்ந்திட பலர்
புறந்தள்ளிட சிலர்
உனக்கேயென ஒரு சிலர்
உள்ளத்தில் வேறுபாடா
உருவத்தில் வேறுபாடா
உன்னதத்தில் வேறுபாடா
இருளும் ஒழியும்
நிலவும் வானும்
நீரும் நெருப்பும்
உன்னைப் பாடிட
உன்னைப் புகழ்ந்திட
உன்னைத் தேற்றிட
எண்ணும் எழுத்தும்
வண்ணம் கொடுத்திடும்
விண்ணைப் போலவே
உன்னை நீயே
உயர்த்திடு தினம் தினம்
உருவம் கொடுத்திடு
விண்ணைத் தொட்ட
விண்மதி நீயென
பல்லவம் போற்றிடும்
வஞ்சிப் பேசிய
விந்தை உலகம்
கொஞ்சிப் பேசிடும்
..........
யோகராணி கணேசன்
29.ஆனி.2019