எளிமை நாயகன்
பாரதி கண்ட அக்கினி குஞ்சு
அதன் சிறகை விரித்த நெஞ்சு
பாச மழையில் அண்ணன்
பள்ளிச்சிட்டுகளின் மன்னன்
இளைஞர்களின் எழுச்சி நாயகன்
இந்திய நாட்டின் பெருந்தலைவன்
தமிழை தலைமையிடத்து வைத்த
தலைவன்
தன்னுயிரை எண்ணாது உழைத்த
அறிஞன்
உலகையே விழித்துப் பார்க்க
வைத்த பிதா
இவர்தான் எங்கள் தமிழ்நாட்டின்
தேச பிதா
இந்திய இராணுவத்தின் மைல்
கல்லு
மாற்றுத்திறனாளிகளின் அகல்
விளக்கு
மேலைநாட்டில் இவர் பேசிய
கருத்தரங்கு பல
எளிய மக்களிடம் பாமரனாய்
பேசுவது இவர் கல
எல்லோரும் சிறகை விரித்து
பறப்பதில்லை
இனி இவரைப்போல் எவரும்
வாழப்போவதில்லை
வாழ்த்த நான் மகான் அல்ல வணங்குகிறேன்...........
எங்கள் அக்கினி சிறகை.....!
வேல் முனியசாமி...