தேர்

ஊர்கூடி இழுக்கும் தேர் அழகாக
ஊர்சுற்றி உலாப்போகிறது

என் வீட்டுத் தேரின் வடக்கயிரை

கைய்யில் கொடுத்து இனி உன் பொறுப்பு என்று

சொல்லாமல் நகர்ந்து விட்டான்

திகைத்து நின்றேன் நான் அசையாது
நின்றது தேர்

நிலையை விட்டு நகர்த்த

வேறுவழியின்றி நான் மட்டும் வடம் பிடித்தேன்

தேர்நகர்ந்தது மெல்ல என் திகைப்பும்
கூட

எழுதியவர் : நா.சேகர் (30-Oct-19, 10:41 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ther
பார்வை : 501

மேலே