இப்படி ஒரு பெண்ணை வர்ணிக்க

பெண்களை வர்ணிப்பது பெண்களுக்கு பிடிக்கும் ...
பெண்களை இயற்கையுடம் இணைத்து வர்ணிக்கத்தவரே இருக்க முடியாது ....
வர்ணிப்பதும் ரசிப்பதும் தவறில்லை ...
அடைய நினைப்பது தான் தவறு ...
கண்ணின் மையை கார் மேகத்துடனும் ...
கூந்தலை மேகத்துடனும் ....
பாதங்களை பஞ்சுடணும் ..
இப்படி ஒவ்வொன்றுக்கும் எதாவது ஒன்றை இணைத்து
ஆண்கள் வர்ணிக்கும் ஜாலத்தின் வலையில் தான்
பெண்கள் வீழ்ந்து விடுகிறார்கள் .... காதலில் ....

வர்ணிப்பது பிடிக்காமல் இருக்குமா ???
யாராவது வர்ணிக்க மாட்டார்களா என்று ஏங்கி தன்னை தானே
கற்பனை குதிரையில் வர்ணித்து கொள்ளும் பெண்களே அதிகம் உள்ளனர்..


திரைப்படம் பார்க்கும் போதோ ...
காலை நிகழ்ச்சிகளின் போதோ ...
தன்னை தனக்கு பிடித்த கதாப்பாத்திரத்தினுடன்
ஒப்பிட்டு கற்பனையில் மிதக்கதா பெண்கள் இருக்கவே முடியாது ...

வர்ணித்தல் என்ற வார்த்தையே பெண்ணை பார்த்து தான் கண்டுபிடித்து இருப்பார்கள் ...

புராண திரைப்படங்கள் கதைகளில் கூட கடவுளே இருந்தாலும் ..
வார்த்தையால் வர்ணித்து தான் காட்சிகளை அமைத்து இருப்பர் ...

பெண்களை திட்டுவதற்கு வெறுப்பதற்கு கூட
பேய் ... பிசாசு ... என்று மற்ற பிடிக்காத ஒன்றுடன் சேர்த்து வர்ணித்து வாழ்வது தான் இயல்பு ...

இதில் யாருக்கும் விதி விளக்கு இல்லை ....

எழுதியவர் : (18-Oct-19, 12:16 pm)
சேர்த்தது : சரண்யா
பார்வை : 58

மேலே