காதலே காதலே
எனக்கு காதலி இல்லை ...
காதலன் இருக்கிறார்...
என்ன மரியாதையை என்று பார்க்கிறீர்களா ....
என் காதலன் தற்போது என் கணவர் ...
காதலுக்காக பல கவிதைகள், பல காவியங்கள், பல திரைப்படங்கள், பல வசனங்கள்,
இப்படி இருக்கும் உலகில் வார்த்தைகளால் காதலை வெளிப்படுத்த தெரியாதவர்....
அவர் பார்வையே பல முறை என்னிடம் காதலை சொல்லி இருக்கிறது ...
பெண்களின் காதல் பூவில் உள்ள பனித்துளியில் போல அழகானது
ஆனால் ஆண்களின் காதல் வேரில் உள்ள நீர் போல ஆழமானது ...
அவர் காதலின் ஆழத்தை கடந்து செல்ல ஏழு ஜென்மங்கள் இல்லை...
எழுபது ஜென்மங்கள் இருந்தாலும் போதாது...
காதலை வர்ணிக்கும் போட்டியில் ...
என் காதலனை வர்ணிக்க புதிய வார்த்தைகளை தேடும் ஆராய்ச்சியில் நான் ....
என்று பட்டம் பெறுவேனோ ???????