சேயே அறிவாய்

தாயின் தோளில் சாய்ந்திருந்தால்
தானே வந்திடும் தைரியமே,
சேயின் எண்ணம் எதுவாயினும்
சேதி சொலாமல் தாயறிவாள்,
சாயும் கொடிக்குக் கொழுகொம்பாய்ச்
சற்றும் பிரியாத் துணையவளே,
ஓயும் போதவள் துணையாயிரு
ஒன்றே போதுமுன் உயர்வுக்கே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (18-Oct-19, 7:38 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 59

மேலே