மலர்
பூத்துக் குலுங்கிய அவைகளுக்கு தங்களின் பயணத்தை பற்றி அப்போது தெரியவில்லை!
மலர்ந்த அவர்களை பிறப்பிடத்திலிருந்து பிரித்த பிறகும் வித்திட்டவர்கே அவை மகிழ்வூட்டின!
வெவ்வேறு காம்பிலிருந்தாலும் அவர்களை இணைத்து இருக்கே தோன்றவைத்தது பூக்கூடை!
தன்னுடைய பிறப்பின் காரணத்தை பூர்த்தி செய்ய சந்தையை நோக்கி புறப்பட்டன அவை!
தன் மலர்ச்சி மறைவதற்குள் மகிழ்வை பரப்ப நினைத்த அவைகளை வாங்கி சென்றனர் அவர்கள்!
தன் புது வாழ்வைத் தொடங்க நினைத்த மணமக்களுக்கு அவைகள் மாலையாக அமைந்து வாழ்த்தின!
தன் மறுவாழ்வை தொடங்க சென்று உயிர் பிரிந்த அந்த உடலுக்கு அவை மரியாதையுடன் வழி அனுப்பின!
மஞ்சள் பூசிய மங்கைக்கு சிகை அலங்காரமாக அமைந்து அழகுற செய்தன!
வாழும் தெய்வங்களுக்கும் வாழ்ந்த உறவுகளுக்கும் அவை பூசை அலங்காரமாகி ஆராதித்தனர்!
இறுதியில் செல்லும் இடமெல்லாம் தன் மணத்தால் புதுப்பெண்ணை போல் அழகுற காட்சியமைத்தனர்!
தன் இறுதிக்காலம் வரும்போது தன் தோற்றத்தை இழந்தாலும்,
தன் தோழன் நார்கயிறு உடனே மங்கி சென்றன, ஓராயிரம் நினைவுகளை தந்து!
- வினோதினி தங்கராஜ்.