என் நினைவெல்லாம் நீதானடி 555

என்னவளே...


எப்போதும் சிரிக்கும் நான்

நீ என் வாழ்வில் வந்தாய்...
நீ வந்த பிறகு நீ
இல்லாமல்
சிரிக்க மறந்தேன்...


மரணத்தையும் நீ இல்லாமல்

போனால் ஏற்றுக்கொள்வேன்...


நீ இல்லாமல்போனால்

வாழத்தான் முடியாதடி...


முல்லை மலரென

உன்னை நினைத்தேன்...
உன் இதயமோ ரோஜா இல்லாத

முட்கள் என்று உணர்ந்தேனடி...


காலம்கடந்துவிட்டது

இளமைக்காலமும் கடந்துவிட்டது...


உன் பிரிவை
நினைத்து
ஏங்கிய நான்...


என் எதிர்காலத்தை

நினைக்க மறந்தேனடி...


என்

நினைவெல்லாம் நீதான்...


என்
எதிர்காலமும் நீதான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (19-Oct-19, 9:00 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 730

மேலே