ஏமாற்றக் கவிதை -  6

ஏமாற்றக் கவிதை -  6
====================

அருவி விழும் ஓசையூடே
குருவி உந்தன் குரல் கேட்டே
மயங்கி விழுந்த என்னை இப்போ
தெளிய வைத்தேன் அடித்துப் போட்டாய்?

ஓடை ஓர மரமேறி
ஆடி வரும் உன்னைக் கண்டேன்..
பாடி நானும் மகிழும் வேளை
கேடி நீயேன் காதல் கொன்றாய்?

ஆற்றில் அள்ளும் மணலளவு
அன்பை உனக்காய் என்னில் வைத்தேன்..
சேற்றில் கூட தள்ள வில்லை
புதை குழியை ஏன் தேர்ந்தெடுத்தாய்?

சுனை நீரின் குளிரெடுத்து
தேகம் செய்து வைத்து இருந்தாய்..
வினை எனக்கேன் செய்து விட்டாய்
துணை இருந்தேன் துன்பம் ஆனாய்?

ஊருணியின் சுவை நீரே
ஊர் முழுக்க உனக்கு நல்லபேரே..
பேரெனக்கு வாங்கித் தரச் சொல்லவில்லை
பேச்செனக்கேன் நிற்கும் படி செய்துவிட்டாய்!

கேணி வந்து நீரெடுத்தாய்
கோணி கோணி நடந்து சென்றாய்..
ஏணி மீது நின்று இருந்தேன்
அதை எட்டி உதைத்தது ஏனடியோ!

ஏரி வரும் பறவையாகி
வாரம் முழுக்க உன் அருகிலிருந்தேன்..
பேரம் பேசியேன் விற்று விட்டாய்
கோரப் பெண்ணென இதயம் சுட்டாய்!

பொய்கைக் கரை வந்திருந்தேன்
பாவை உந்தன் ஒப்புதல் கேட்க‌..
நீ ஏறெடுத்தும் பார்க்க வில்லை
நான் வாடியிருக்கிறேன் ஊற்றேன் நீர்ச்சொல்லை!

அ.வேளாங்கண்ணி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (20-Oct-19, 6:34 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 306

மேலே