இயற்கை

நீல வானமும்
நிறம் மாறும்!

ஆழக் கடல் நீரும்
கரை மோதும்!

மலை கூட சரிந்துவிடும்
வானை முட்ட மீண்டும் எழுந்துவிடும்!

மெல்லியதாய் தலையசைக்கும் மரமும்!
சில நேரம் தாண்டவம் ஆடும்!

ஒளிவீசும் ஆதவனும்!
உறங்கிப் போவதும் உண்டா!

மேகமும் ஓவியம் ஆகும்!
காற்று மோதி கலைந்து விளையாட!

பாலை வனத்திலும் உயிர்கள்!
பாறையின் மீதும் மரங்கள்!

விவசாயம் செய்யும் பறவைகள் அழுகுரல்
யார் கேட்டதுண்டு?


தூக்கி எறிந்த குப்பைகள்!
கரை ஒதுக்கும் கடலலை போராட்டம் எப்போது ஓயுமோ!

இயற்கையை நேசிப்போம்
இயற்கை வாழ அல்ல நீ வாழ்ந்துவிட🙏!

அன்புடன் ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (21-Oct-19, 7:41 am)
Tanglish : iyarkai
பார்வை : 161

மேலே