அவள்

தனிமையில் நானிருந்தேன் இணையத்தில் வந்தாள் இரண்டறக் கலந்தோம்...


முப்பொழுதும் அவள் ஞாபகமே நாற்றிசையும் அவள் நல்மணமே..

ஐம்பொறியும் அல்லல் படும்
ஆறரிவின் சிந்தனை கெடும்
ஆதவனும் அட்(ஷ்)டமிக்கும் அவளை கண்டால்...

நவரத்தினத்தையும் தன் அங்கத்தில் சூடியவளாய் என்றும் ஒலிக்கும்
அவள் பெயர் பத்மினி..!

அட்ரீனல்கள் ஏறுது அவளை கண்ட நொடி..
ஆர்மோன்கள் கூடுது உடலில் கண்டபடி...

உலகப் பெண்கள் பூசும் உதட்டுச்சாயம் உற்பத்தி ஆகும் இடம் அவள் உதடு தான்...

தேவர்களும் தேடி பறிக்க தூண்டும் செந்தாமரையும் அவள் தான்...

மூன்றாம் உலகப்போர் மூலும் என்றால் முதற்காரணம் அவள் தான்...

அறிவுக்கும் ஆபத்துக்கும் சொந்தமவள்...பாசத்திணையான பந்தமவள்... மறவேன் என்று சொன்னவள்...
என்றுமே அவள் என்னவள்..!


எழுதியவர் : துரை.முருகன் (தனி ஒருவன்) (21-Oct-19, 7:12 pm)
சேர்த்தது : Thanioruvan
Tanglish : aval
பார்வை : 160

மேலே