கருவாச்சி காதலே
கருவாச்சி என்ன
சாச்சிட்டியே
கடுதாசி கண்ணுல
போட்டுட்டியே
வயலோரம் ஓ இடுப்பாள
என் நெஞ்சை உழுதுட்டுயே
இந்த விவசாயி தோட்டத்துல
ஓ காதல விதைச்சிட்டியே
அடி மலைச்சாரல் போலவே
என் மீது மோதுறாய்
மலை தேனீ கொசுக்களாய்
என் ஆசை தூண்டுறாய்
முந்தானை தீவுகளில்
என்னைத் தேடி தொலைகிறேன்
கடற்கரை வழி சேர
காற்றிடம் வரைபடம் கேட்கிறேன்
ஜன்னலை தட்டும் காற்றாய்
என்னை வந்து தட்டாதே
தென்றலை கொஞ்சி பேச
என்னால் இன்று முடியாதே
விழித்தடம் பட்டதால்
வழித்தடம் மாறினேன்
ஒளித்தடம் தீண்டவே
உன்னை சூரியனாய் தேடுறேன்
கருவாச்சி என்ன
சாச்சிட்டியே
கடுதாசி கண்ணுல
போட்டுட்டியே
ஏண்டி ஏண்டி .....
BY ABCK
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
