என்னை அனைத்தபடி நீ ரசிக்க வேண்டுமடா 555

ப்ரியமானவனே...


முதன்முதலில் ரசித்த

மழைத்துளிபோல...


என்னில் கலந்த

உயிர்துளி நீயடா...


முதல்முறை உன்னைக்கண்டதுமே

காதல் மொட்டு மலர்ந்ததடா...


என்னவனே நானும்

காத்திருக்கிறேனடா...


நம் வீட்டு வாசலில்

நான் மாக்கோலமிட...


அருகில் நின்று என்னை அனைத்தபடி

நீ ரசிக்க வேண்டுமடா...


நானும் வெட்க மழையில்

நனைய வேண்டுமடா...


உன்

உயிர்கொண்ட மனைவியாக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (21-Oct-19, 8:39 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 774

மேலே