எழுந்து வா தமிழினமே எழுந்து வா

எழுந்து வா...! எழுந்து வா...!
வீறு கொண்டு எழுந்து வா...
தமிழின வீரவரலாறை உலகறிய முழங்கிட
எழுந்து வா...!எழுந்து வா...!
வீறு கொண்டு எழுந்து வா...!
உலக நாகரீகத்தின் முன்னோடி நாமென செறுக்குடன் முழங்கிட
எழுந்து வா! எழுந்து வா...!
வீறு கொண்டு எழுந்து வா...!

கீழடி தந்தது ஆணிவேருடன் ஆதாரம்-இனி
தாழடி வீழ்ந்தது சமஸ்கிருத சண்டிகள் அகங்காரம்
ஆரிய ஆவண அலந்தைகளுக்கு சேதாரம் -இனி
எழுந்து எக்காளமிடு தமிழினமே அனைத்தின் மூலாதாரம்

இன்னும் இன்னும் இருக்கிறது ஏராளம் -இனி
கண்ணில் காட்சியாகும் இருட்டடித்த பூகோளம்
தடையின்றி நடந்திடவேண்டும் ஆராய்ச்சி ஆடுகளம்
படைகொண்டு எழுந்து வா காண்போம் வெற்றிக்களம்!

எழுதியவர் : வை.அமுதா (22-Oct-19, 9:37 am)
பார்வை : 47

மேலே