சமர்ப்பணம்
வஞ்சம் என்னில் வளரவில்லை.
அது என்னை மீறி வளர்வதற்கு நான் அனுமதித்ததில்லை.
சிந்தையால் உணர்ந்ததை எழுதுவேன்.
உண்மையை உரக்கச் சொல்வேன்.
யார் என்னை விட்டு போனாலென்ன?
நான் என்னை விட்டு போகாத போது எனக்கு எது பயம்?
கண்டதும் போலித்தனத்தை அறிகிறேன்.
அது என் தவறா?
குழந்தைக்குப் பால் கொடுத்தால் மார்பழகு போகுமென்று எண்ணம் கொண்டோரை எப்படி சிறந்தவளாக காண்பது?
அவள் மிடுக்கு நடையில் பெற்றதும் பிள்ளையை தூக்கி எறிந்துவிட்ட திமிரும் கண்களில் தானே வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறதே!
அப்பனும் ஆத்தாளும் சம்பாதிப்பதில் குறியாக இருக்க பணத்திற்காக ஒரு ஆள் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்!
அதில் தாயின் அன்புதான் கிடைக்குமா?
இல்லை.
தந்தையின் அறிவுதான் வழிகாட்டுமா?
இல்லை.
பதினெட்டு வயதைத் தாண்டியும் தன் பிள்ளையை குழந்தை போல் அன்பு செலுத்தும் பெற்றோரும் உண்டு.
அவர்களின் பிள்ளைகள் வழி தவறுவதில்லை.
கூடாத நட்பு அறுந்து போக,
பகட்டுத்தனம் எரிந்து போக,
விபச்சார குணம் ஒழிந்து போக,
ஒழுக்கம் எங்கும் தழைக்க உறுதியை உள்ளத்தில் ஏற்றி அதற்காகப் பாடுபட வேண்டும் என்ற நோக்கில் என் எழுத்துக்களை சமர்ப்பிக்கிறேன் ஆத்மார்த்தமாக.