உன் வாழ்வோடு நீ போராடு 555

வாழ்க்கை...


ஏட்டு கல்வி கற்றுக்கொடுக்காத

வாழ்க்கை தத்துவத்தை...


அனுபவம்

கற்று கொடுக்கும்...


யாரோ ஏளனம்

செய்வார்கள் என்றெல்லாம்...


உன் விருப்பத்தை

முடக்கிவிடாதே...


பின்னால் வரும் ஆயிரம்

விமர்சனங்களுக்காக...


நீ முன்னேறும் பாதையை

தவறவிடாதே...


பிறர்

முன்னேறும் நேரம்...


நீ முட்களை பாதையில்
வீசாமல் இருந்தால் போதும்...


உன்

வாழ்வோடு நீ போராடு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (23-Oct-19, 8:26 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 675

மேலே