தெண்டனிட்டு வாங்கிவந்தான் தேர்ந்து - இன்னிசை வெண்பா
இன்னிசை வெண்பாக்கள்
கால்மேல்கா லிட்டுக் கணவன் படுத்திருக்க
கால்களுக்குப் பக்கத்தில் கைவைத்தே இல்லாளும்
வெய்யில் வரும்முன்னே வீதிசென்று கத்திரிக்காய்
பையில்வாங் கென்றாள் பணிந்து! 1
முணுமுணுத் துச்சென்ற மூதறிஞன், காலின்
கணுக்காலும் வாயிலிற் கால்தடுக்கிக் கீழ்வீழ
நொண்டிநொண்டித் தான்கடைக்கு நொந்தபடிச் சென்றவனும்
தெண்டனிட்டு வாங்கிவந்தான் தேர்ந்து! 2
ஆதாரம்: தென்காசி நண்பர் வெங்கடாசலம் தர்மராஜன் அவர்களின் இரண்டு வெண்டுறைகள்.