தீபாவளி
பங்களா முன்னே வித விதமான
பட்டாசு வெடி கேளிக்கைகள்
ஊசிப்பட்டாசு சரங்கள், ஐந்தாயிரம், பத்தாயிரம்
என்று தரையில் விரிக்கப்பட்டு கொளுத்தப்பட்ட
அக்கம்பக்கம் அதிரும்படி வெடிக்குது இடிபோல்
அதிர.......... அதைக்கேட்டு ஒரு பணக்கார திமிரில்
பங்களா இளைஞர்கள் சிரித்து கும்மாளம் ....
எதிர் வாடை குப்பத்து ஏழை சிறுவர்கள்
பிங்கலாமுன் ஓடி வந்து கூறுகிறார்
சாம்பலாய்ப்போன பட்டாசு குவியலை
குத்தி கொதறி, சில வெடிக்காத ஓசைபட்டாஸை
கண்டெடுத்து , அவற்றை ஓரிடத்தில் கூட்டி
தீயிட்டு, வெடிக்குது பட்டாசு
அதைக்கண்டு, கேட்டு ஏழை சிறுவர்
ஆனந்த நடனம்....... கூப்பாடு, வாய்நிறைய சிரிப்பே
எளிமையில் காணும் ஏழையின் சிரிப்பு ...
பங்களாs சிறுவர் சிரிப்பில் திமிர், அகம்பாவம்
ஏழை சிறுவர் சிரிப்பில் அலாதி திருப்தி ஆனந்தம்
ஒன்றுக்கொடுக்கும் ஆண்டவன் ஒன்றை
எடுத்துக் கொள்கிறான்...!!!!