தீபாவளி வாழ்த்துக்கள்

பனிவிலக்கும் கதிரொளி போல்
இருள்விலக்கும் தீப சுடரொளி
மனங்கவரும் மத்தாப்பு புன்னகை
மதங்கள் தாண்டி பூக்கலாம்
சரவெடி சிரிப்பொலி சிதறிட
இணையம் தாண்டி இணையலாம்
வீடெங்கும் மாக்கோலம் அழகூட்ட
மாவிலை தோரணம் மங்களஞ்சேர்க்க
எண்ணைக் குளித்த ஈரத்தலையோடு
புத்தாடை தேகம் சூழ
சிவகாசி பட்டாசில் மனம்மகிழ
வீட்டில்சுட்ட பலகார வாசம்
வீதியில் செல்வோரை சுண்டியிழுக்க
வயிறு முட்ட தின்னாலும்
செரிமானதிற்கு தீபாவளி லேகியம்
நம்மில் இருக்கும் நரகாசுரனை
வீழ்த்தும் யுக்தி பெருநாளாம்
உறவும் நட்பும் ஒன்றிணைந்து
கூடி மகிழும் பொன்னாளாம்
ஏற்றம் தரும் திருநாளாம்
தீயவை போக்கும் நன்னாளாம்
அனைவரும் இனிதே கொண்டாடுவோம்
வாழ்வில் என்றும் வளம்பெறுவோம்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

எழுதியவர் : அருண்மொழி (27-Oct-19, 9:40 am)
சேர்த்தது : அருண்மொழி
பார்வை : 170

மேலே