முடியும்💪🏻

மற்றவரை மகிழ்விக்கும்
மனங்களுக்குள் மறைந்திருக்கிறது
மனக் காயங்கள்

மனம் விட்டு மகிழ்ந்து பேசுங்கள்
மடை திறந்தாற்போல்
மனம் திறப்பர் மகிழ்விழந்து...

மனம் விரும்பி செவி மடுங்கள்
மருந்தின்றி யிறங்கட்டும்
மனப்பாரம் - உங்கள்
மௌன மொழிகளால்......

எழுதியவர் : யோகராணி கணேசன் (1-Nov-19, 10:35 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 749

மேலே