ஹலூவீன்

ஹலூவீன் ஏனோ
கவர்ந்துதான் இழுக்கிறது
நம்மை விட்டுச் சென்றவர்கள்
நினைவுகளை ஊர் கூடி நினைக்கிறது

சிலந்தி வலையொத்த சாளரங்கள் அலங்காரம்
சிறிவர்கள் சிறு முகமூடியணிந்து
தெருவெங்கும் விழாக் கோலம்

பெரும் பூசனிக்காய் குடைந்து- எங்கும்
திரியிட்டு ஒளிக் கோலம்

வீடு தோறும் வாசலிலே
கையிலே மிட்டாய்களுடன்
பெரியோர்கள் காத்திருப்பு
சிறுவர்கள் வரவுக்காய்!

கையிலே சிறு முட்டியோடு
தம்மை மறந்து கூட்டமாக
வீடு விட்டு வீடு தாவும்
சிறுவர்கள் ஊர்க் கோலம்

ஐப்பசி மாதத்து இறுதி நாளன்று
ஐரோப்பாவுடன் ஐக்கிய அமரிக்கரும்
ஐயமற கொண்டாடும் ஹலூவீன்

தீ மூட்டி விறகெரித்து
வெள்ளை நிற பன்னாடை துணி கொண்டு
ஆங்காங்கே மின் மினி வெளிச்சமூட்டி

சிலந்தியோடு மண்டையோடும் எலும்புக்கூடும் ஆங்காங்கே தொங்கவிட்டு

வண்ணத்துப் பூச்சியும்
பொன் வண்டும், இப்படி இப்படி சில சில
இவையாவும் நம் எழு பிறப்பு புராணத்தை
நினைவூட்டி நிலை நிறுத்தி செல்கிறது
இன்றுமொரு ஹலூவீன்.....

எழுதியவர் : யோகராணி கணேசன் (1-Nov-19, 1:14 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 174

மேலே