இதோ இவள் இங்கே கடந்து செல்கிறாள்
ரோஜாவைக் கடந்து சென்றேன்
ஏன் பார்க்காமல் போகிறாய் என்று கேட்டது
பார்த்தேன் ரசித்தேன் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன் !
கண்ணாடியைக் கடந்து சென்றேன்
ஏன் உன்னையே உனக்கு பார்க்க ரசிக்கவில்லையா என்றது
நின்றேன் அழகு பார்த்துவிட்டுச் சென்றேன் !
பூனை இருப்பதை கவனிக்காமலே சென்றேன்
பூனை குறுக்கே ஒடி வந்தது நின்றேன் சகுனத் தடை என்றா ? இல்லை
கையிலெடுத்து முத்தமிட்டேன் மகிழ்ச்சியில் துள்ளி ஓடியது !
இதோ இவள் இங்கே கடந்து செல்கிறாள்
கவனிக்காமலே நடந்தேன்
அழகை ரசிக்காத ஆணவக்காரனோ என்று நினைப்பாளோ என்று
நின்று திரும்பிப் பார்த்தேன்
அவளும் திரும்பிப் பார்த்தாள்
உதட்டின் மௌனத்தில்
ஒரு புன்னகை மெல்ல மலர்ந்து மூடியது !