ஆசிரியர் தலையங்கம் - The Common Sense அக்டோபர் 2019 இதழுக்காக எழுதியது

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் – அமெரிக்கா அமைப்பின் “The Common Sense” மாத இதழின் வாசகர்களுக்கு அன்பு வணக்கம். அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியாரின் கருத்துக்களை அமெரிக்கா வாழ் தமிழர்களிடம் கொண்டுசெல்ல தொடங்கப்பட்ட இந்த அமைப்புக்கும், அமைப்பின் சார்பாக வெளிவரும் இந்த மாத இதழுக்கும் நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் அன்பிற்கும், ஆதரவுக்கும் நன்றி !

தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாள் , பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் தோழர்களால் , பாஸ்டன் , சிகாகோ , ஆர்லாண்டோ நகரங்ககளில் கருத்தரங்கம் , பட்டிமன்றம் என சமூகநீதித் திருவிழாவாக கொண்டாடப்பட்டது .

தொடர்கதையாகி வருகிறது ஆழ்துளை மரணங்கள் . சுஜித் - தமிழகத்தின் கண்ணீர் துளியாக மாறிவிட்டான் . பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் தனது ஆழ்ந்த இரங்கல்களை சுஜித்தின் பெற்றோர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறது .

நிலவுக்குச் செயற்கைக்கோள் அனுப்பும் ஒரு நாட்டிடம் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை பாதுகாப்பாக மீட்க கருவிகள் இல்லை . மனித உயிரின் மதிப்பு இருக்கும் இடம் பொறுத்து மாறுகிறது என்பது வேதனையான நிலைமை. இதனை தடுக்க கடுமையான சட்டங்களாவது அரசாங்கங்கள் போட வேண்டும் .ஆள்துளைக் கல்லறைகள் இதுவே கடைசியாக இருக்கட்டும்.

பெரியாரும் அண்ணலும் வகுத்துக்கொடுத்த பாதையில் நேர்மையாகவும் , வெளிப்படையாகவும் , தன்னாட்சியுடனும் தொடர்ந்து செயற்பட தங்களின் மேலான ஆதரவையும் ஊக்கத்தையும்
வழங்கிடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம் . தங்கள் படைப்புகள் , கருத்துக்கள் , விமர்சனங்கள் , விளம்பரங்களை மின்னஞ்சல் வாயிலாக பகிர்ந்துகொண்டால் மேலும் ஊக்கம் பெறுவோம் .



வாழ்க தந்தை ! வாழ்க அண்ணல் !

வளர்க பகுத்தறிவு ! செழிக்க மனிதநேயம் !

நன்றி

ஆசிரியர் குழு

எழுதியவர் : பாவி (4-Nov-19, 4:29 am)
சேர்த்தது : பாவி
பார்வை : 213

சிறந்த கட்டுரைகள்

மேலே