உல்க்கா நாயக் பொற்ந்த் நாள் விலா

என்னடா இந்திப்பட முன்ணணி நடிகர், நடிகையர் எல்லாம் தனி விமானத்தில வந்திருக்காங்க?
@@@@@
அதா..உலக நாயகன் கமல்ஹாசன் அவுங்களோட பிறந்த நாள் மற்றும் 60ஆண்டு திரைக் கலைச்சேவையைப் பாராட்டி நடக்கிற விழாவில கலந்துக்க வந்திருக்காங்களாம்.
@@@@@@@
சரி நிருபர்கள் மூத்த நடிகர் அமிதாப் பச்சனை பேட்டி எடுத்தாங்களே அவுரு என்ன சொன்னாரு?
@@@@@@
தமிழ்ல பேசுணுங்கிற ஆர்வக்கோளாறில பச்சன் "உல்க்கா நாயக் பொற்ந் நாள் விலா கல்ந்து சிர்பிக்க நங்கா இங்க சென்னைக்கி வந்தம்"னு சொன்னாரு.
@@@@@@@
பரவால்லடா. யாரோ எழுதிக் குடுத்ததை நமக்குப் புரியற மாதிரி அமிதாப்பு பேசிட்டாரு..

எழுதியவர் : மலர் (7-Nov-19, 10:03 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 67

மேலே