விருட்சமானேன்

அல்லும், பகலும்
அயராது
பறக்க பறக்க
பாடுபட்டு
பணம் சேர்க்க
முயன்றதில்
சொந்த பந்தங்கள்
சொல்லாமல்
சிதைந்தன,
பொருள் வந்து
சேர்ந்தபோது
கடைசி வரை
கூட வருவது
காசு, பணமல்ல
உறவுதானென
அறிந்தபோது
தாமரை இலைத்
தண்ணீர் போல
வேரிழந்த
விருட்சமானேன்

எழுதியவர் : கோ. கணபதி. (10-Nov-19, 8:31 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 32

மேலே