அண்ணா
அண்னன் இருப்பவளுக்கு அதன் தேவை புரியாது
என்னை போல் அண்ணனுக்காக ,
ஏங்குபவளுக்கு மட்டுமே அது புரியும்
பார்ப்பவனை அண்ணனாக ஏற்க எண்ணி
இறுதியில் ஏமாற்றம் வரும்
எவர் மீது அன்பு வைத்தாலும்
எனக்கு துன்பமே மிகும்
என் உணர்ச்சிகளை புரிந்துகொள்ள
எனக்கு ஆள் இல்லை
ஒவ்வொரு நாளும் அதுவே என் கவலை
இதை எழுதும் போது ஏன் எனக்கு
கண்ணீர் மல்கிறது என்று தெரியவில்லை
ஏன் எனக்கு இந்த ஆசை
என்று நான் அறிவதில்லை
என் இறுதி மூச்சுக்கு முன்பு
என்னை புரிந்து கொள்ளும்
என் அண்னன் கிடைப்பான் என்ற நம்பிக்கை ,
கடலோறோம் இருக்கும்
பாரைப்போல் தேய்கிறது
என்ன தான் என்னை நான்
சமாதானம் செய்தாலும்
எனக்கு கண்ணீர் நிற்க வில்லை
எனக்கு அண்ணன் என்ற உறவு தேவை இல்லை
என்று என்ன முடியவில்லை
நான் அண்னன் என்று முடிவு செய்தவர்கள்
விளையாட்டாய் நான் அண்னன் இல்லை,
என்று கூறிய வார்த்தை
என்னை சடலத்தில் எரிக்கும்
உடம்பு போல என்னை வாட்டுகிறது
அந்த வார்த்தையால் நான்
அண்னன் வேண்டாம் என்று நினைக்க வைத்தது
என்னை மேலும் மேலும் கண்ணீர் மல்க வைத்தது
அண்னன் வேண்டும் என்ற ஆசை
இன்னும் எனக்கு கூடுகிறது
இதை எழுதி முடிக்கும் வரை
என் கண் கசங்குகிறது .