நல்லாயிருக்குமா

எல்லாமும் அழகு தான்
அதிகம் ஆகாதவரை ,
பெய்யும் மழை கூட அழகு
வெள்ளம் வராத வரை ,
தென்றலும் அழகு
வேகம் கூடாதவரை

வறுமைக் கோட்டுக்குக் கீழே
வாழ்பவர்கள் அதிகமாம்
இந்தியாவில் ,
படிப்பறிவில் அதிகம்
பின் தங்கியிருப்பதும்
இங்கு தானாம்

ஊட்டச் சத்து குறைவால
உயிரிழக்கும் குழந்தைகள்
அதிகம் இந்தியாவில் ,
அழிவு தரும் செயல்கள்
இப்படியே அதிகரித்தால்
இந்தியா அழகென்று சொல்ல
இதயம் ஏற்குமா ?

அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சாகும் ,
அளவுக்கு மீறிய
வறுமையும் / செல்வமும்—மனித
ஒழுக்கத்தைக் கெடுக்காதா ?
நாடு நல்லாயிருக்குமா ?

எழுதியவர் : கோ. கணபதி. (10-Nov-19, 2:13 pm)
பார்வை : 43

மேலே