இறைவன்

உயிரே உனக்குள்
உன்னை இயக்குவது யாரோ
எனக்குள் இருந்து
என்னை இயக்கம் நீ
இதற்கு பதில் சொல்வாயோ...
நீ தேடி அலையும் 'அவன்'
அந்த இறைவன்தான் என்னை
இயக்குபவனும் ......
உன்னுள்ளே நான்.... என்னுள்ளே
'அவன்'...... இன்னும் 'அவனை'
எங்கே தேடி அலைகின்றாய் நீ
உன்னை நீ உணர்ந்தால்
என்னை உணரும் நீ
என்னுள்' அவனைக்' காண்பாய்
அவன்தான் இறைவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (10-Nov-19, 8:46 pm)
Tanglish : iraivan
பார்வை : 518

மேலே