வாழ்கையின் மாற்றம்
எடுக்கும் முடிவும்
எடுக்கப்படும் ஒன்றும்
என்றும் ஒத்திருப்பதில்லை...
'வாழ்கை உன் கையில் - ஆம்
வளர்பிறை ஆக்கி விடு'
என்றெல்லாம் நம்பினேன் - இன்று
என்னை நம்பாமல் வாழ்கிறேன்..
மழலை மொழியும்
மழையின் ஒலியும்
வீசும் காற்றும் வசந்தம் தரும் அன்று
வாழ்க்கை அறியா பருவத்தில்...
புன்சிரிப்பில் பூத்திருந்த முகம்
புள்ளி மானென துள்ளித் திரிந்த கால்கள்
பள்ளி கல்லூரி அணுபவித்த அந்நாட்கள்!
கனவு காணும் கண்கள்
நம்பிக்கை குறைய காலங்கள்!
வேலைக்காக போராட்டம்
வாழ்க்கையின் பேரோட்டம்
கனவுகள் கண்ணில் மட்டும் இருக்க
கரங்கள் தேடும் கரன்சியை...
தன்னம்பிக்கையின் தரம் குறைந்து
தள்ளாட வைப்பதேனோ???
மண்ணில் மழையும்
மரத்தின் எழிலும்
மணம் கலந்த காற்றும்
கொடுக்கவில்லை மன வசந்தம் - இன்று
மிச்சமோ மன அழுத்தம் ..