திருநெல்லை நாராயண அய்யர் சேஷன் காப்பு

தனி ஒருவனாய் இந்திய தேசத்தை அரட்டியவன்
அரசியல்வாதிகளின் அடிவயிற்றை கொளுத்தியவன்
திராணியற்றிருந்த தேர்தல் ஆணையத்தை
திறம்பட செயல்படுத்திய திறமையாளன்

திக்விஜயம் செய்த திறமையான அரசனைப்போல்
திறன்மிகு சட்டத்தால் தம் பலன்தனை காட்டியவன்
எல்லைக்குள் இருந்தே யாவரையும் வழி நடத்தியவன்
இரு மூன்று ஆண்டுகளில் தேர்தல் இருளை நீக்கியவன்

தேர்தல் எனும் தேரை திறம்பட ஒட்டிய சாரதி
தேவையில்லா பிரச்சார சத்தத்தை நீக்கிய காரகன்
தேன் தமிழ்நாட்டில் பிறந்த ஒரு திறமையாளன்
தேகபலமும் மூளை பலமும் ஒருங்கு பெற்ற சேவகன்

ஆவின மழையில் அவன் பிறந்தவிடம் செழிக்கட்டும்
ஆலய மணிபோல அவன் செயல் எங்கும் ஒலிக்கட்டும்
ஆன்றோர் சான்றோர் எல்லாம் அவனைப் புகழட்டும்
ஆனந்த நிலையிலேயே அவன் ஆன்மா அமைதியாகட்டும்.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (11-Nov-19, 9:05 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 62

மேலே