நட்பு 🤝🙏

நட்பு 🤝🙏

மானுடத்தின் ஆக பெரிய அதிசயம் நட்பு.
மனிதனுக்கு இறைவன் வழங்கிய வரம் நட்பு.
மனித உறவுகளில் உண்ணதமானது நட்பு.
காலம் கடந்து நிற்கும் அதுவே நட்பு.

உயிர் கொடுப்பான் தோழன்.
உண்மையா?
இரண்டாயிரம் வருடம் முன்பு
கிரேக்க புராணத்தில்
நடந்த ஓர் அற்புத சம்பவம்.
பிதாகரஸ் கனித மேதையை குருவாக ஏற்றுகொண்டு இரு நண்பர்கள்.
ஒருவன் பெயர் தேமன், மற்றொருவன் பெயர் பிதீஸ்.
இருவரும் இனைப்பிரியா நண்பர்கள்.

புரட்சி எண்ணம் கொண்ட இருவரில் பிதீஸ் அரசனுக்கு எதிராக செயல்பட்டான். அவனை கைது செய்து அரசன் அவனுக்கு மரண தண்டனை விதித்தான்.
இதை கேட்டு
கலங்கி போனான் தேமன்.
மனதை கல்லாக்கிக்கொண்ட பிதீஸ் அரசனிடம் சில காலம் அவகாசம் கேட்டான்.
தன் உறவுகளை கண்டுவிட்டு இரண்டு நாட்களில் வந்துவிடுவதாக கெஞ்சி அரசனிடம் கேட்டு கொண்டான்.
"நீ அப்படியே ஓடிவிட்டதால் , உன்னை எப்படி நம்புவது" வினா எழுப்பினான் அரசன்.
நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும்.
அந்த இரண்டு நாட்கள் என் நண்பனை ( தேமனை) உங்கள் கைதியாக பணையம் வைக்கிறேன்.
"இரண்டு நாட்கள், ஒரு நிமிடம் தாமதித்தாலும் உனக்கு பதிலாக உன் நண்பன் உயிர் போகிவிடும். எச்சரிகை. அரசன் பிதீஸிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தான்.

இரண்டு நாட்கள் மிக வேகமாக ஓடியது.
அரசனிடம் கூறியபடி பிதீஸ் வரவில்லை.
"பார்த்தாயா உன் நண்பன் உன்னை ஏமாற்றி விட்டான். உன்னை பணையம் வைத்து உனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டான்.
அரசன் மிக
ஏளனமாக பேசி
சிரித்துக்கொண்டே இவனை தூக்கு மேடைக்கு அழைத்து செல்லுங்கள் என்று கட்டளையிட்டான்.
தேமன் அமைதியாக ஏதும் பதில் கூறாமல் அரசன் கட்டளைக்கு கட்டுபட்டு நடந்தான்.
பலிமண்டபம் அழைத்து செல்லப்பட்டான் தேமன்.
முகம் கருப்பு துணியால் மூடப்பட்டது.
தூக்கு கயிரு அவன் முகத்திற்கு நேராக தொங்க விடப்பட்டது.
சுருக்கு கயிறு அவன் கழுத்தை பதம் பார்க்க ஆயத்தம் ஆக,
"நிறுத்துங்கள், தயவு செய்து நிறுத்துங்கள்.
நான் வந்துவிட்டேன் என்னை தூக்கிலிடுங்கள். என் நண்பனை விட்டுவிடுங்கள்" என்று கத்தினான் பிதீஸ்.
"ஏன் நண்பா நீ திரும்ப வந்தாய். உனக்கு பதில் என் உயிர் போனால் என்ன தவறு. உனக்கு பதில் நானே சாகிறேன்.
நீ வரக்கூடாது என்று என்று நான் ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டேன்.
இதில் தவறு ஏதும் இல்லை. நீ போய்விடு.
நீ உன் குடும்பத்தோடு சந்தோஷமாக இரு."
தேமன், கதறி அழுதான்.
"குற்றம் சாட்டப்பட்டவன் நான் தான். நீ அல்ல. உன்னை கழு ஏற்றுவது ஏற்புடையதல்ல. அரசே என் நண்பனை விட்டுவிடுங்கள். நீங்கள் கூறியவாறு எனக்கு தண்டனை கொடுத்து விடுங்கள். தக்க நேரத்திற்கு வராதது என் தவறே தவிர்த்து, என் நண்பன் ஒரு பாவம் அறியாதவன். அவன் வாழவேண்டும். அவனை தயவு செய்து விடுதலை செய்யுங்கள். பிதீஸ் குற்ற உணர்வுடன் மனம் கலங்கி அழுது, கதறி, அரசனிடம் கெஞ்சினான்.
அங்கு கண்ட காட்சியை கண்ட அரசன் ஆடிபோய்விட்டான்.
"இப்படி ஒரு இனையை, உயிர் நண்பர்களை நான் வாழ் நாளில் பார்த்தது இல்லை. உயிரையே கொடுக்கும் அளவுக்கு மனோபாவம்.
உயர்ந்த நட்பு. அதிசயம். அபாரம். யார் அங்கே இந்த இரு நண்பர்களையும் விடுதலை செய்யுங்கள்" என்று அரசன் உத்தரவு பிறப்பித்தான்.
"இந்த இருவரும் நட்பின் மான்பை எனக்கு கற்பித்துள்ளனர். நீங்கள் இந்த சமுதாயத்துக்கு அவசியம் தேவை. நீங்கள் இதே நட்புடன் நீண்ட காலம் வாழ என் வாழ்த்துக்கள்."
அரசன் ஆனந்த கண்ணீர் விட்டான். நண்பர்கள் இருவருக்கும் சந்தோஷத்தில் கட்டி அனைத்து கொண்டனர்.
இந்த உலகத்தில் இன்னமும் சந்தோஷம், சிரிப்பு, மகிழ்ச்சி காணபடுவது நட்பு என்ற மூன்று எழுத்து மந்திரத்தால்.
நட்பு புனிதமானது.
நட்பு மகோன்னதனமானது.
காலத்தின் சுழற்சியால் நண்பன் சாகலாம், நட்பு ஒரு காலும் சாகாது.

- பாலு.

எழுதியவர் : பாலு (14-Nov-19, 7:14 pm)
சேர்த்தது : balu
பார்வை : 963

மேலே