வள்ளுவன் பேசுகிறான் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

வள்ளுவன் பேசுகிறான்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

வைதீக பற்றார்களே வணக்கம்.
வேதத்தை படிப்பவர்களே வந்தனம்.
ஆட்சியாளர்களே !
ஏன் என் இந்த மீது திடிர்
பாசம்.
ஏன் என் மீது திடிர் அக்கறை.
நீங்கள் என் மீது போர்த்தியது தூய காவியா.
அல்லது அரசியல் சாயம் பூசிய காவியா.
எனினும், என் மீது நேசம் காட்டியதுக்கு மிக்க நன்றி.

சரி அது போகட்டும், நான் அனைவருக்கும் பொதுவானவன் என்றே வைத்துக்கொண்டாலும்,
அது எப்படி என்னை நீங்கள்
பின்பற்றும் மதத்தில்
அடக்கி வைக்க முடியும்.
காரணம், நான்
என் நூல் எழுதிய
காலத்தில் கட்டத்தில்
நீங்கள் இப்போது என் மீது தினித்த மதம் இருந்ததா?
இல்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
பின் ஏன் என் மக்களை இப்படி குழப்புகிறீர்கள்.
மக்களே குழப்பம் வேண்டாம்.
குழம்பவும் வேண்டாம்.

நான் தமிழன் அவ்வளவே.
நான் எழுதியது தமிழில்.
என்னுடைய படைப்பின் நோக்கம்
இந்த உலக மானுடம் சிறக்கவே.
மனித வாழ்க்கை வளம் பெறவே.
அறம், பொருள், இன்பம்
முப்பால் குறித்தே.
உறக்க சொல்வேன் நான்
தமிழால் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறேன்.
ஆட்சியாளர்களே!
உங்களிடம் ஒரு சின்ன விண்ணப்பம்.
உண்மையில் என் மீது உங்களுக்கு அக்கறை இருப்பின்
தமிழகம் போல்
நம் நாட்டில் உள்ள அனைத்து மாநில பள்ளிக்கூடங்களில் எந்நூலை அறிமுக படுத்துங்கள்.

என் மேல் இப்படி நீங்கள் போலி காவி சாயம் பூசுவதால் உங்களுக்கு எந்த ஆதாயமும் கிட்டபோவதில்லை,
நீங்கள் எந்த பயனும் அடையபோவதில்லை என்பதே என்னுடைய தீர்க்கமான கருத்து.
- பாலு.

எழுதியவர் : பாலு (8-Nov-19, 11:40 pm)
சேர்த்தது : balu
பார்வை : 127

மேலே