இவ்வுலகின் இறுதி பிணம்

இரவு மண்ணில் துளிர்விடும்
நிலவொளிக்கு
மின்மினி பூச்சிகளின் முத்தங்கள்
ஆயிரம் பனித்துளி போல்
உறங்குகிறது.
அவளின் ஈரவிழியில்.......

சற்றுமுன் பெய்துவிட்ட
மழைதுளிகளின் சொட்டும்
ஓசையோடு ஒத்து
கேட்கிறது
அவளின் இதயத்துடிப்பு ......

நீராவியின் வாசனையாய்
மணம் கொண்ட மலர்
மங்கி மடங்கி
வாடிக்கிடக்கிறது
அவளின் குழலில்.......

கிளை பிரிந்த
இலைச்சருகுகள் போல்
காம்புகள் அற்று
சரிந்து கிடக்கிறது
அவளின் உடல்......

இவ்வுலகின் இறுதி பிணமென
தழல் போல் தனையெண்ணி
இறுக்க பற்றிக்கொள்ளும் இறைவன் (தலைவன் )
எங்கே என கரம் தேட
இடம்.......................................................வெற்றிடம்.

ஆம்
அவள் இறுதி பிணம் தான்
இவ்வுலகில்......

எழுதியவர் : சிவகுமார் ஏ (12-Nov-19, 12:49 pm)
பார்வை : 77

மேலே