என் எழுதுகோல்

என் மன வேதனையை
என் ரணங்களை
என் ஆதங்கத்தை
சமுதாயத்தின் மீதான என்
விருப்பு வெறுப்புகளை தினமும்
என் எழுதுகோலுக்கு சொல்கிறேன்
அது வெள்ளைத்தாள் மீது
விழுந்து விழுந்து அழுது வண்ண கண்ணீர் சிந்துகிறது அதுவே கவிதையாகிறது
அதை மற்றவர்கள்
படிக்கும்போது
அவர்களுக்குள் ஒரு தாக்கத்தை
எற்படுத்தும்போது
என் மனக் காயங்களுக்கு
களிம்பு பூசப்படுகிறது
என் ரணங்கள்
தற்காலிகமாக குணமடைகிறது

.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (12-Nov-19, 9:28 am)
Tanglish : en ezhuthukol
பார்வை : 434

மேலே